151030183115_kovan_singer_vinavu_512x288_vinavu (1)

திருச்சி: புகழ்பெற்ற இடதுசாரி பாடகரை, அவர் பாடிய பாடல்களுக்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த கோவன் (45) புகழ்பெற்ற இடது சாரி பாடகர். கிராமிய இசையில், நடப்பு அரசியல், சமூக சூழ்நிலை குறித்து பாடல்களைப்பாடி வருகிறார். இவரது  “மூடு டாஸ்மாக்கை!” ஊரூக்கு ஒரு..”  ஆகிய இரு பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை.

டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாடப்பட்டுள்ள இவற்றில் தமிழக அரசையும், ஜெயலலிதா மீதான விமர்சனங்களும் உண்டு.

இந்த இரு பாடல்களும் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி, பல லட்சம் பேரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.

இந்த நிலையில் தோழர் கோவன், நள்ளிரவில் சைபர் க்ரமை் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது  124 – ஏ–(தேசத்துரோக குற்றம்: சட்டபூர்வமாக அமைந்த அரசை அகற்ற திட்டமிடுவது) பிரிவின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவன் கைதை கண்டித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவனின் கைதுக்கு காரணமான பாடல்களில் ஒன்று ஊத்திக்கொடுத்த உத்தமி. அந்த பாடல்..

“ஊத்திக் கொடுத்த உத்தமி
ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம் ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸூல உல்லாசம்
(ஊருக்கு ஊரு சாராயம்…)
இட்டிலி ஒத்த ரூவா, கக்கூசு அஞ்சு ரூவா பட்ட சோறு அஞ்சு ரூவா, பருப்பு விலை நூறு ரூவா பாட்டில் தண்ணி பத்து ரூவா, படிக்க பீசு லட்ச ரூவா நீ வாழ வெச்ச தெய்வமுண்ணு கூவலைண்ணா கொன்னுருவா
(ஊருக்கு ஊரு சாராயம்…)
படிக்க வுடாம உஸ்கூல மூடுறான் குடிக்க ஒயின்சாப்ப கோயிலாண்ட தெறக்கிறான் மாசம் ஒருநாள்தான் மண்ணெண்ணெ ஊத்துறான் இந்த நாசமத்த கடைய மட்டும் மிட்நைட்லதான் சாத்தறான்
(சும்மாக் கிடந்த ஊருக்குள்ள கடையை வச்சான் ஆணு பெண்ணு அத்தனை பேரையும் குடிக்க வெச்சான்)
ஆட்டுக்குட்டி, பேன், மிக்சி அள்ளித் தந்த அம்மா ஆட்சி தெருத்தெருவா கடைய வெச்சி குடுத்ததெல்லாம் புடுங்கிகிச்சி கேக்காம வாரிக் கொடுக்கும் ஆட்சிடா இடுப்பு வேட்டியையும் உருவிக்கினு போச்சிடா
(ஊருக்கு ஊரு சாராயம்..)
தமிழகத்தின் பாருக்கெல்லாம் தலைக்காவிரி மிடாசு குடிமகன் மட்டையானா கலெக்டருக்கு சபாசுபாரெல்லாம் அ.தி.மு.க குண்டாசு இதுக்கு ஆல் டைமு செக்யூரிட்டி போலீசு
(ஊருக்கு ஊரு சாராயம்..)
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆள் படைக்கு சம்பளம் போலீசு, குவாலிசு செலவு ஐட்டம் ஏராளம் அம்மா வந்து போனா அந்தச் செலவே பயங்கரம் சும்மா கேனத்தனமா மூடச் சொன்னா அவங்க பியூச்சரெல்லாம் என்னாகும்!”

கோவன் கைது குறித்து ம.க.இ.க. அமைப்பு வெளியிட்டுள்ள சிறு வீடியோ அறிக்கை கீழே..