குறுகிய வடிவிலான நகைச்சுவை, ஆட்டம்பாட்டத்துடன் தங்களது திறமைகளை வெ ளிப்படுத்த உதவும் செயலியாக டிக்டாக் விளங்கிவருகிறது. சீன தயாரிப்பாக இருந்தாலும் கூட அமெரிக்காவில் 38% சந்தையை தக்க வைத்துள்ள டிக்டாக் செயலியை உருவாக்கிய பைட்டான்ஸ் நிறுவனம் தற்போது இசை பிரியர்களுக்காக தனி செயலியை உருவாக்கி சோதனை பதிப்பாக வெ ளியிட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி தற்போது வரை 27000 பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது

இதற்காக இந்தியாவில் டீ சீரியஸ், டைம்ஸ் மியுசிக் போன்றவர்களிடம் அவர்களது இசையை பயன்படுத்தும் உரிமத்தையும் பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் மட்டும் ஏன் சோதனை பதிப்பு வெ ளியிடப்பட்டுள்ளது என்று பார்த்தால் அதிகமான நேரம் இணையத்தில் இயக்கத்தில் இருப்பது இந்த இரு நாட்டு மக்களும் என்பதாலோ என்னவோ இந்த இரு நாடுகளிலும் இவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்.

செயலியை இங்கே இருந்து பெறலாம்

https://www.resso.app/in

இந்தியா போன்ற நாடுகளில் இதுபோன்ற தொழில் முனைவுகள் மிக அவசியம். மற்ற நாடுகள் அனைத்தும் செயலிகளை உருவாக்கி அதற்கு இந்திய மக்களை அடிமைப்படுத்த முயற்சிக்கிறார்களே தவிர இந்தியாவில் இருந்து இதுபோன்ற செயலிகளை பெரியதாக யாரும் முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வமுரளி