a

ராபர்ட் நாய்ஸ்….

விஞ்ஞானி. “நுண் தொகுசுற்றுகள்” ஆக்கத்துக்கு பெரும்பங்களித்தவர். கணினிச் சில்லுகளை உற்பத்தி செய்யும் இன்ட்டெல் (Intel) நிறுவனத்தை உருவாக்கியவர் என்றால் எளிதில் அனைவரும் அறிந்து கொள்வார்கள்.

உலகம் நவீனமடைய… மிகப்பெரும் பங்களித்தவர்களில் ஒருவர்!

@@@@@

எரிக் ஸ்டார்க்…

இவரும் விஞ்ஞானி. மெக்கானிசம் டிசைன் அல்லது முடிவுக்கேற்ற திட்டவகுதி என்னும் கொள்கைக்கு அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவர். இதற்காக 2007 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசை லியோனிடு ஹுர்விக்ஸ், ரோஜர் மையெர்சன் ஆகிய இருவருடன் சேர்ந்து நோபல் பரிசு பெற்றார்.

நமது வாழ்க்கை எளிதாக உதவியவர்களில் ஒருவர்!

@@@@@

 

எட்வர்ட் மண்ச்

எட்வர்ட் மண்ச்….

நார்வே நாட்டைச் சேர்ந்த உலகப்புகழ பெற்ற ஓவியர். 1895ம் ஆண்டு ‘அலறல்’ என்கிற தலைப்பில் இவர் வரைந்த ஓவியம் மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியது.

வரையப்பட்டு நூறாண்டுகள் கழிந்த பிறகு…. 119.9 மில்லயன டாலருக்கு ஏலம் போனது! இது ஒரு உலக சாதனை. தவிர… இந்தத் தொகையைக் கொண்டு அருங்காட்சியகம், கலைக்கூடம் ஆகியவை உருவாக்கப்பட்டன.

நூறாண்டுகள் கழித்தும் தனது படைப்பின் மூலம் சாதனையும், பலருக்கு நன்மைகளும் செய்த மனதர்!

@@@@@

 

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ், 1981ம் வருடம் இதே நாளில்தான் பிறந்தார். இடதுகை ஆட்டக்காரரான இவர், தனது துடிப்பான விளையாட்டால் அனைவரையும் கவந்தார். எட்டாவது ஐ.பி.எல். இவரை, டி,ல்லி அணி 16 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. இது ஒரு சாதனை தொகையாகும்.

தோனி தலைமையில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை வென்ற அணியில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

புற்று நோயால் பாதிக்கப்பட் இவர், தகுந்த சிகிச்சையாலும் தனது தன்னம்பிக்கையாலும் வெற்றிகரமான மனதிராக உலாவருகிறார். புற்று நோய் சிகிச்சை அளிக்கும் மையம் ஒன்றையும் திறந்து தனது பொது நலத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

@@@@@

d

நடிகர் ரஜினிகாந்த்

சிவஜிராவ் என்ற இயற்பெயர் கொண்ட.. கர்நாடக மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர், தமிழகம் வந்த தனது ஸ்டாலான நடிப்பாகம் தமிழ்ப் பெருங்குடி மக்களின் மனதில் நிற்பவர். திரைப்படங்களில் நடித்து தமிழக மக்களை மகிழ்ச்சிப்படுத்துபவர்.