டில்லி

டில்லியில் இன்று 3229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,21,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 2,21,533 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 26 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 4,770 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,374 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,88,072 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 28,691 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.