fb (2)

“பேஸ்புக்கே கதி என்றே கிடக்குதே எம் புள்ள!” ” என்று பெற்றவர்கள்  வருத்தப்பட்டு பேஸ்புக்கிலேயே ஸ்டேட்டஸ் போடும் காலம் இது!  அந்த அளவுக்கு வாலிப, வயோதிக அன்பர்கள் அனைவரையும் ஆக்கிரமித்திக்கும் சமூகவலைதளம்  இது.

இதன் அதிபர், மார்க் எடுத்திருக்கும் ஒரு முடிவு, பேஸ்புக் பயன்பாட்டார்கள் எண்ணிக்கை குறைய வழிவகுக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

அப்படி என்னதான் முடிவெடுத்துவிட்டார் மார்க்?

”இதுவரை பேஸ்புக்கில்  எழுதப்படும் பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிக்க மட்டுமே “லைக்” பட்டன் இருக்கிறது.  இனி குறிப்பிட்ட பதிவு  பிடிக்கவில்லை என்றால் அதைத் தெரிவிக்க தனியாக டிஸ்லைக் என்கிற ஆப்ஷன் வைக்கப்படும்” என்று  அறிவித்திருக்கிறார் மார்க்.

இந்த ஆப்ஷன் வந்தால் பேஸ்புக் வீழும் என்கிறார்கள் அதன் பயனாளர்கள் சிலர். அவர்களில் ஒருவரான ஜி.துரை மோகன்ராஜு, ” இப்போது, ஒரு குறிப்பிட்ட பதிவு பிடிக்கவில்லை என்றால்g moகமெண்ட் செய்துதான் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். ஆகவே பதிவு பிடிக்காத பலரும் மவுனமாக கடந்துவிடுகிறார்கள்.  ஆனால்,  டிஸ்லைக் ஆப்ஷன் வந்துவிட்டால், எதிர்ப்பைத் தெரிப்போர், எளிதாக டிஸ்லைக் பட்டனை தட்டிவிட்டு சென்றுவிடுவார்கள்.

தற்போது பேஸ்புக்கில் உலாவரும்  பெரும்பாலோர் “லைக்”குகளுக்கு அடிமை ஆனவர்களே. அவர்கள், தங்கள் பதிவுக்கு டிஸ்லைக் போடுபவர்களை, தங்கள் நட்பு வட்டத்தில ்இருந்து விலக்கவோ நீக்கவோ செய்வார்கள்.

ஆகவே ஒவ்வொருவரது நட்பு வட்டமும் குறையும். ஆகவே, நண்பர்களை இணைவது என்ற அடிப்படையில் செயல்படும் பேஸ்புக் பயன்பாடு  ஒட்டுமாத்தமாக குறையும்.

இதுவவரை வளர்ச்சியில் சென்றுகொண்டிருக்கும் பேஸ்புக், இந்த டிஸ்லைக் காரணமாக வீழ்ச்சியை சந்திக்க நேரிடலாம்” என்கிறார் ஜி.துரை மோகன்ராஜு.