வெலிங்டனில் நடந்து முடிந்த முதல் டி20 தொடரில் இந்திய அணியை 80 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்திய நியூசிலந்து அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடியாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

india

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டியில் 4-1 என இந்திய அணி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரரான களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டிம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்ட்ரி மற்றும் சிக்ஸர்களை விளாசினார். டிம் 84 ரன்களை குவித்த நிலையில் கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த முன்ரோ 34 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதேபோன்று மற்றுமொரு வீரரான ஸ்காட் 17 ரன்களே எடுத்த நிலையில் புவனேஷ்வர் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஒவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பில் ஹர்திக் பாண்டியா 2விக்கெட்டும், புவனேஷ்குமார், கலீர் அகமது, சாஹல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா ஒரு ரன்னிலே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். எனினும், ஷிகர் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்த விஜய் சங்கர் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். தவான் 29 ரன்களிலும், 27 ரன்களிலும் ஆட்டமிழக்க பிறகு வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களிலேயே அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.

இருப்பினினும் மகேந்திர சிங் தோனி மற்றும் க்ருனால் பாண்டியா போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆடினர். தோனி 31 பந்துகளுக்கு 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, க்ருனால் பாண்டியா 20 ரன்கள் வரை அடித்தார். இறுதியாக இந்திய அணி 19.2 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 80 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் 3 விக்கெட்டுகளையும், லோக்கி மிட்சல் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஒருநாள் கொண்ட தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் டி20 தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.