0
 
ன் இப்படி தொடர்ச்சியாக TIMES NOW பொய்களை கூற வேண்டும் இதனால் இவர்களின் Credibilty பாதிக்கும் என்று அவர்கள் அறிய மாட்டார்களா… ?
மனு வேதத்தை மட்டுமே நம்புவர்கள் மனிதனில் வேற்றுமையை ஏற்படுத்தி கொள்கையை உள்ளவர்கள் மட்டுமே எப்படியாவது அதிகார பீடத்தில் இருக்க வேண்டும் என்ற நப்பாசை தான் இவர்களுக்கு காரணம் ..
இந்த சிந்தானந்ததை தூக்கி நிறுத்தும் ஆர்.எஸ.எஸ். ஆதரவு நிலைபாட்டை ரங்கராஜ் பாண்டே  வகையராஸ் மென்மையாக வாழைப்பழ ஊசி போல ஏற்றினால் அங்கே வடக்கில் அரணாப் கொஸ்வமிகள் துப்பாக்கி தூக்கி கொண்டு டுமில் டுமில் சத்தத்துடன் ஏற்றுவார்கள் ..
கடந்த தேர்தலில்…
ஆம் ஆத்மி 29 சீட்
பாரதிய ஜனதா 34 சீட்
என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து சொன்ன போது மக்களோ இவர்களை பார்த்து “போடா வெண்ணை” என்றே 67 சீட் ஆம் ஆத்மி ; வெறும் 3 சீட் பாரதிய ஜனதா என்றார்கள் ..
திருந்தினார்களா மீடியா என்ற போர்வையில் அமார்ந்துள்ள திருட்டு நாதாரிகள்..?
திரும்பவும் வந்து ..
பீகாரிலும் இப்படித்தான்..
நிதிஷ் + லாலு + காங்கிரஸ் : 112 சீட்
பாரதிய ஜனதா 117 சீட்
என்றே அடித்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மக்களோ வெறுப்பில் இந்த முறை இவர்களை பார்த்து “போடா டால்டா” என்றே 182 சீட் நி+லா+ கா ; வெறும் 58 சீட் பாரதிய ஜனதா என்றார்கள்…!
இப்போது அதே வட இந்திய மீடியா என்ற போர்வையில் உள்ள ஓநாய் கூடம்,  தமிழகத்தில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் அதிகமான இடங்களில்  அதிமுக ஜெயிக்கும் என்று சொல்கிறது.
நிற்க..
இப்பொது இருப்பது போல தமிழகத்தில் இரு முறை Multi Corner Contest புள்ளி விவரங்கள் பார்க்கும் போது , எதிர்கட்சிகள் ஓட்டுகள் பிரியும் போது அவை ஆளும் கட்சிக்கு எதிராகவே இருந்து உள்ளது.
1977
திமுக : 4,258,771 வாக்குகள் – 25% (48 சீட்)
அதிமுக : 5,734,692 வாக்குகள் – 33% (144 சீட்)
காங்கிரஸ் : 3,491,390 வாக்குகள் – 20% (32 சீட்)
ஜனதா 2,851,884 வாக்குகள்- 17% (10 சீட்)
1989
திமுக : 9,135,220 வாக்குகள் – 38% ( 150 சீட்)
அதிமுக (Jaya ) : 5,393,857 வாக்குகள் – 22% (27 சீட்)
அதிமுக ( Janaki) : 2,214,965 வாக்குகள் – 9% ( 1சீட்)
காங்கிரஸ் வாக்குகள் 4,780,714 – 20% (26 சீட்)
1977 தேர்தலில் திமுக தனியாக நிற்க எம்ஜியாரோ கம்யூனிஸ்ட் மற்றும் அன்றைய களத்தில் தென் மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள forward block மற்றும் muslim legue உடன் கூட்டணி வைத்தார் அதன் காரணமாக அதிமுக வெறும் 13 லட்சம் ஓட்டுகளை கூடுதலாக பெற்று 8 % வித்தியாசத்தில் 104 சீட்டுகளை கூடுதலாக பெற்று ஆட்சியில் அதிமுக அமர்கிறது ..
சில லட்ச ஓட்டுகளில் திமுக சரியான கூட்டணி கிடக்க பெறமால் 1977 1980 1984 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்க ., எம்ஜியாரோ கூட்டணி இருக்கும் போதும் மட்டுமே ஜெயித்து இருப்பதை காணலாம் .அதுவும் 1980 காங்கிரஸ் திமுகவுடன் சேர்ந்த போது 28 லட்சம் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தவர் எம்ஜியார்.
1989 தேர்தலில் CPI வெறும் 13 இடங்களை ஜெயலலிதாவிடம் பெற்றும் ., CPM (நல்லசிவம் ) 21 திமுகவிடம் பெற்றும் களத்தில் இறங்கியது.. அதிமுக ஜெ + ஜ இரண்டையும் சேர்தாலும் 31 % மட்டுமே பெற்று 26 லட்சம் ஓட்டுகளை இழந்து 7% வித்தியாசத்தில் 122 சீட்டுகளை இழந்து ஆட்சியை இழந்தது .
இப்போது உள்ள நிலையில் 6% வித்தியாசம் என்பது அதிமுக அழிவின் விளிம்பின் அமர்ந்து வெறும் 40 சீட் பெற போராடும் நிலையே .. 6% வித்தியாசம் உண்மை என்றால் திமுக காங்கிரஸ் கூட்டணி 165+ இடங்களில் வெல்லும் ..
ஆனால் 6% வேறுபாடு இருத்தும் திமுக அணி மற்றும் அதிமுக அணி இரண்டுமே ஒரே நிலை என்று சொல்லும் இவர்கள் வினோத ஊளையிடும் போக்கை நாமும் சிரித்தபடியே தவிட் செய்து விட்டு கடக்க வேண்டியுள்ளது ..
முறைகேடாக சொத்து குவித்த வழக்கின் தன்மை காரணமாக ஜெயலலிதா மீது நம்பிக்கை இழந்த அதிமுக வில் நடக்கும் உள்ளடி வேலைகளை கட்சிக்குள்ளே பார்க்கும் போது இந்த 6% சதவிதம் மேலும் உயர்ந்து 20வதுக்கு கிழே இடத்தை மட்டுமே பெற்று அதிமுக படு தோல்வியை நோக்கி பயணிக்கறது என்றே அவதானிக்க வேண்டி இருக்கிறது!
 
Venkat Ramanujam (முகநூல் பதிவு)