சென்னை,

மிழகம் முழுவதும் கடந்த மாதம் 20ந்தேதி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் அதிரடியாக  கட்டணத்தை அதிகரித்தது. இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  அனைத்து எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதன் காரணமாக உயர்ந்த பேருந்து கட்டணத்தில் சிறிது அளவு குறைத்து அரசு அறிவித்தது.

அதைத்தொடர்ந்து பஸ் பாஸ் கட்டணமும் உயரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வரும் 8ந்தேதி முதல் புதிய பஸ் கட்டணம் அமலுக்கு வருகிறது.

தற்போது, மாநகர அரசு பேருந்துகளில் ஒரு நாள் பயணம் செய்வதற்கான டிக்கெட்  கட்டணம்  50 ரூபாயாக உள்ளது. இது 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போன்று மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் 1000 ரூபாயில் இருந்து 1300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண நடைமுறை சென்னையில் வரும் 8 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ஆனால், பள்ளி மாணவர்களுக்கான பஸ் பாசில் எந்தவித மாற்றமுமில்லை.