வுண்டர்ஸ்விலே, பென்சில்வேனியா

பென்சில்வேனியாவில் தங்கள் வங்கிக் கணக்கில் தவறுதலாகச் செலுத்தப்பட்ட $1,20,000 பணத்தை ஒரு தம்பதியர் உடனடியாக செலவு செய்துள்ளனர்.

நமது வங்கிக் கணக்கில் தவறுதலாக $1,20,000 பணம் வந்திருந்தால் நாம் என்ன செய்வோம்? அதன் மதிப்பு என்ன என கணிப்போம்.  அதன் மதிப்பு ரூ.85.94 கோடிகள் ஆகும்.   பலரும் அதைக் கொண்டு வீடு வாங்குவோம்,  வாகனம் வாங்குவோம்,,  கடன்களைச் செலுத்துவோம், அல்லது தொழில் தொடங்குவோம் என விடை அளிக்கலாம்.   ஆனால் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன என்றால் அந்த தொகை குறித்து உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பதே ஆகும்.

அவ்வாறு செய்யாமல் அதைச் சொந்த உபயோகத்துக்கு செலவிடும் போது அதை சட்டப்படி திருட்டு எனவே கருதப்படும் நிலை உள்ளது.   பென்சில்வேனியா நாட்டைச்  சேர்ந்த  மவுண்டர்ஸ்விலே நகரில் ராபர்ட் வில்லியம் மற்றும் அவர் மனைவி டிஃபானி வில்லியம் ஆகியோர் ஒரு வங்கியில் இணை கணக்கு (ஜாயிண்ட் அக்கவுண்ட்) வைத்திருந்தனர்.

அதில் தவறுதலாக ஒரு தொழிலதிபருக்குச் செலுத்த வேண்டிய பணமான $120,000 செலுத்தப்பட்டுள்ளது.    ஆனால் இவர்கள் இருவரும் வங்கிக்குத் தெரிவிக்காமல் அந்தப் பணத்தை எடுத்து தாறுமாறாகச் செலவு செய்துள்ளனர்.  சுமார் இரண்டரை வாரத்துக்குப் பிறகு விவரம் அறிந்த வங்கி அந்த பணத்தை இவர்கள் கணக்கில் இருந்து உரியவர் கணக்குக்கு மாற்றி உள்ளது.

தற்போது வில்லியம் தம்பதியர் தங்கள் கணக்கில் உள்ள அனைத்துப்  பணமும் எடுத்துச் செலவிட்டதால் அவர்களுக்கு வங்கி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.    இவர்கள் இந்த பணத்தில் தங்கள் நண்பர் ஒருவருக்கு $15,000  உதவி அளித்துள்ளனர்.   மீதமுள்ள பணம் அனைத்தையும் கணக்கில்லாமல் செலவு செய்துள்ளனர்.

இது குறித்து வில்லியம் தம்பதியர்  செய்தியாளர்களிடம் ஏதும் கூற மறுத்துள்ளனர்.

வங்கி நிர்வாகம் இந்த தவறு செய்த ஊழியர் மீது எவ்வித நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க மறுத்துள்ளது.