திருப்பாவை

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே அற்புதமான ‘திருப்பாவை.

ஆண்டாளும், ஆழ்வார்களில் ஒருவர்தான்.

வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 முதல் 503 வரையுள்ள முப்பது பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.

தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இந்த மாதத்தில் அதிகாலையில் எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றுக்குச் சென்று நீராடுவர். பிறகு இறைவனைத் துதித்து வழிபடுவர். அப்போது திருப்பாவையை உருக்கத்துடன் பாடுவர்.

மார்கழி ஒன்றாம் நாளான இன்று, முதல் பாடல்..

“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்!

போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி

யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்

போல்முகத்தான் நாரா யணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப்

படிந்தேலோ ரெம்பாவாய்…”

 

(நாளை காலை இரண்டாம் பாடல்..)