r

னது அலுவலகத்தில் அசைவ உணவுக்கு தடை விதித்திருப்பது, அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிக்கையாளர்களை பதவி நீக்கம் செய்வது என இந்துத்துவத்தை உயர்த்திப்பிடிக்கிறது, தி. இந்து நாளிதழ்” என்று குற்றம் சாட்டியிள்ள மே 17 இயக்கம், நாளை காலை இந்து அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெயிட்டுள்ள அறிக்கையாவது:

மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது. ‘பெரும்பான்மையானவர்கள் சைவ உணவு உண்பவர்களாக இருப்பதால் , அசைவ உணவினை அனுமதிப்பதில்லை’ என்றும் சொல்லி இருக்கிறது.

மேலும் இந்துத்துவாவினை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்து நாளிதழ் கொலைக்குற்றச்சாட்டிற்குள்ளான சங்கராச்சாரியரை பாதுகாப்பது முதல் மோடி அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிக்கையாளர்களை பதவி நீக்கம் செய்வது வரை தனது இந்துத்துவ விசுவாசத்தினை காட்டியே வருகிறது.

இவ்வாறு தனது முற்போக்கு முகமூடியை வைத்துக்கொண்டு அரசியல் செயல்பாட்டாளர்களை தனது பிடிக்குள் கொண்டு வருவதும், தனது ஊடகத்தின் வணிகத்திற்கு பயன்படுத்திக்கொள்வதுமாக இருக்கும் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்துவது அவசியம்.

இந்த அடிப்படையில் தி இந்துவின் இரட்டைத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாகவும் , அசைவ உணவினை உட்கொள்ளும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பணியாளர்கள் மீது தனது சாதிவெறியை அம்பலப்படுத்தும் விதமாகவும் இம்முற்றுகையை தோழமை இயக்கங்களுடன் இணைந்து மே17 இயக்கம் மேற்கொள்கிறது.

வாய்ப்பிருக்கும் அனைத்து தோழர்களையும் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” – இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.