mithai

தீபாவளி பண்டிகையில் முக்கிய இடம் வகிப்பது பலகாரங்கள்தான். விதவிதமான ருசி ருசியான பதார்த்தங்களை வீட்டிலேயே செய்து உண்டு மகிழ்வது நமது வழக்கம்.

இந்த பதார்த்தங்கள் செய்ய, முக்கிய பங்கு வகிப்பது நெய். ஆனால் நெய் என்று பாட்டிலில் அடைத்து விற்பதெல்லாம் நெய் அல்ல. பெரும்பாலும் கலப்பட நெய் வாங்கியே நாம் ஏமாறுகிறோம்.

நாட்டில் தினமும் 300 டன் சுத்தமான நெய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அதைவிட அதிகமாக 400 டன் அளவிற்கு செயற்கை நெய் உற்பத்தி செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்படுகிறது. ஹரே கிருஷ்ணா, கவாலா, முராரி, நந்தகோபால், காமதேனு, மில்க் மாஸ்டர் போன்ற பெயரில் போலியான வடமாநில முகவரிகளோடு விற்கப்படுகின்றன

இந்த செயற்கை நெய் தயாரிப்பதற்கு மாட்டுக் கொழுப்பு, சணல் எண்ணைய், பாமாயில், டால்டா,தேங்கா எண்ணெய், கெமிக்கல் பொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்து மற்றும் மெழுகு போன்றவை நெய்க்கு கலப்படப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.

இவற்றோடு, நெய் வாசனை வருவதற்காக ஜெர்மனியிலிருந்து அரை கிலோ ரூ.2000 என்ற விலையில் இறக்குமதி செய்யப்பட்ட எசன்ஸ் கலக்கப்படுகிறது. ஒரு சொட்டு எசன்ஸ் ஊற்றினாலே செயற்கை நெய் சுத்தமான பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை விட நறுமணம் தூக்கலாக இருக்கும். பிரபலமான நிறுவனங்கள் பெயரில் இந்த வகை நெய் விற்கப்படுவதால் அப்பாவி வாடிக்கையாளர்கள் போலிகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

இந்த போலி நெய், மிக மலிவான விலையில் கிடைக்கும். ஆகவே இவற்றைத் தவிருங்கள்..!

707e8-pasum-nei-unbathil212

சரி, சுத்தமான நெய்யை எப்படி கண்டறிவது?

ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி உருகிய நெய் மற்றும் அதே அளவுக்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கலவையில் ஒரு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்குங்கள். பிறகு ஐந்து நிமிடம் அப்படியே வைத்திருங்கள். சோதனைக் குழாயின் அடியில் ஊதாநிறம் அல்லது கருஞ்சிவப்பு நிற அமிலப் படிவு காணப்பட்டால் அதில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.

இன்னொரு முக்கிய தகவல்: சுத்தமான நெய்யும் கூட கொழுப்பு அதிகமான பொருள்தான். இதற்கு ஒரு மாற்று இருக்கிறது.

காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுத்தமான கடலை எண்ணெயைக் காய்ச்சி அதனுடன் நெய் சேர்த்து ‘பலகார நெய்’ செய்வார்கள். இது உடலுக்கு கெடுதல் கிடையாது என்பதோடு மிகுந்த சுவையானதும்கூட. வாய்ப்புள்ளவர்கள் இதை பயன்படுத்துங்கள்.