zzzzz

தீபாவளி கொண்டாட்டம் நெருங்கி வருகிறது.  வெடி வெடிப்பது மகிழ்ச்சியான விஷம்தான். அதே நேராம் எச்சரிக்கையாக வெடிக்காவிட்டால், அசம்பாவிதம் நேரும்.  வெடி வெடிக்கும் போது கீழ்க்கண்ட ஆலோசனைகளை கவனத்தில்கொள்ளுங்கள்.

1. சங்கு சக்கரங்களை கண்டிப்பாக சிமெண்ட் தரையில் வைத்துதான் பொருத்த வேண்டும். மண் தரையில் வைத்து பொருத்தக் கூடாது.

2. பூச்சட்டிகளை எக்காரணம் கொண்டும் கையில் வைத்து பொருத்தக்கூடாது.

3. கம்பி மத்தாப்புக்களை கொளுத்தும் போது அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொண்டு எரிந்த கம்பிகளை அதனுள் போட்டு விட வேண்டும். தரையில் எரிந்தால் அது உங்களது காளில் பட்டு தீ காயம் ஏற்பட்டுவிடும்.

4. வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து சோதித்து பார்க்க கூடாது. தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும்.

5. பட்டாசு திரிகளை பற்ற வைக்க தீக்குச்சிகளை உபயோகிக்க கூடாது. பட்டசுகளுக்காகவே பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பத்திகுச்சிகளை மட்டும்தான் உபயோகிக்க வேண்டும்.

6. பாம்பு மாத்திரைகளை வீட்டுக்கு வெளியேதான் கொளுத்த வேண்டும். வீட்டிற்குள் கொளுத்தினால் அதனால் ஏற்படும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

7. பட்டாசுகளை மருத்துவமனை அருகிலோ அல்லது குறுகலான தெருக்களிலோ உபயோகிக்ககூடாது.

8.பட்டாசுகளை தூக்கி எரியவோ அல்லது காலால் எட்டி உதைக்கவோ கூடாது.

9. ராக்கெட் வெடிகளை உபயோகிக்கும் போது உயரமான பாட்டில்களிலோ அல்லது பைப்புகளிலோ மட்டும் தான் உபயோகிக்க வேண்டும்.

10. குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள். வெடிகளை டின், பாட்டில் போன்றவற்றில் வைத்து வெடிக்க கூடாது.

11. குழந்தைகளை பெரியவர்களின் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிக்க செயுங்கள்.

12. குழந்தைகளை சட்டை பைகளில் பட்டாசுகளை வைக்க அனுமதிக்காதீர்கள்.

13. பட்டாசுகளை கொளுத்தும் பொழுது இருக்கமான ஆடை அணியுங்கள் முடிந்த வரை பருத்தி ஆடையாக இருக்கட்டும்.

14. எதிர்பாராத விதமாக உங்கள் மேல் தீ விபத்து ஏற்பட்டால் ஓடாதிர்கள். உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள் அல்லது கீழே படுத்து உருளுங்கள்.

15. தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள். விரைவில் மருத்துவரிடம் சொல்லுங்கள்.

  • அமுல்சார்