IMG-20160313-WA0039
திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சங்கர். இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார்பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த19 வயதான கவுசல்யா என்ற இளம் பெண்ணுக்கும் காதல் அரும்பியது.
இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறிதிருமணம் செய்து கொண்டார்கள்.
இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். அந்த பெண், தென் மாவட்டத்தில் உள்ள ஆதிக்க சாதி ஒன்றை சேர்ந்தவர். அந்த இளைஞர் தலித் இனத்தைச் சேர்ந்தவர்.
பெண்ணின் குடும்பத்தினர், காதலுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதையும் மீறி காதலர்கள் திருமணம் செய்துகொண்டதை அறிந்து கடும் ஆத்திரம் அடைந்தனர்.
IMG-20160314-WA0004
கவுசல்யாவை சங்கர் கடத்தி சென்று விட்டதாக அவரது  பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால் தாங்கள் விருப்பப்பட்டு திருமணம்செய்து கொண்டதாகவும், சங்கருடன் வாழ விரும்புவதாகவும் கவுசல்யாகூறிவிட்டார். அவர் மேஜர்  மேஜர் என்பதல், சங்கரோடு செல்ல காவலர்கள் கூறிவிட்டனர்.  இதையடுத்து இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்த ஆரம்பித்தனர். மாதங்கள் ஓடின. இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று அவர்கள் நினைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று(  ஞாயிற்றுக்கிழமை)  இருவரும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக உடுமலைக்கு வந்தார்கள். உடுமலை  பேருந்து நிலையம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது,  இருசக்கர வாகனத்தில் வந்த  மூன்று பேர்,   திடீரென அரிவாளைஎடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டி கூறுபோட்டனர். பிறகு அதே வாகனத்தில் பறந்துவிட்டனர்.
IMG-20160314-WA0016
படுகாயமடைந்த சங்கர், கவுசல்யா  இருவரும்  உடுமலை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டுமேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டனர். வழியிலேயே சங்கர் மரணமடைந்தார். கவுசல்யாபடுகாயங்களோடு சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில், “கவுசல்யாவின் தாய்மாமாதான் ஆள் வைத்து இந்த தாக்குதலை நடத்தினார்” என்று தெரியவந்திருக்கிறது. தப்பியோடிய கொலையாளிகள் மூன்று பேரையும் காவல்துறை தேடிவருகிறது.
அந்த கொடூர கொலை சம்பவம், அருகில் இருந்த கடையின் சி.சி. டிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.
அந்த வீடியோ லிங்க்…
https://www.youtube.com/watch?v=7oOR-HtrAbQ