gun
புளோரிடா
துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வரும் பெண்மணியை அவருடைய 4 வயது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஜாக்சன்வில் பகுதியைச் சேர்ந்தவர் ஜேமி ஜில்ட் என்ற 31 வயதுப் பெண்மணி. அவர் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு ஆதரவாக  சமூகவலைத் தளங்களில் எழுதி வருகிறார். இவரை அவருடைய 4 வயது மகனே துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதுதொடர்பாக புளோரிடா மாகாண காவல்துறையினர் கூறியதாவது:-
துப்பாக்கி கலாசாரத்திற்கு ஆதராவக குரல் கொடுத்துவரும் ஜேமி ஜில்ட் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவருடைய 4 வயது மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவருடைய அடிவயிற்றில் குண்டுபாய்ந்த நிலையில் காருக்குள் கிடந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
இவருடைய முகநூல் பக்கம் முழுவதும் இனவாத அரசியலும் துப்பாக்கி வைத்துக் கொள்வதை ஆதரித்தும் ஏராளமான பதிவிட்டுள்ளார். மேலும் இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியர்சுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டெட் குரூஸின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.
இவர் மருத்துவமனையில் அனுமதிக்க கொண்டு சென்றபோதுதான் காரில் பின்பக்கம் இருந்த தன் 4 வயது மகன் எதிர்பாராதவிதமாக தன்னை சுட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
அவரது மகன் உறவினர்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளார். இன்னும் முழுவிசாரணை முடியவில்லை. அதற்குப் பின்னரே ஒரு முடிவுக்கு வரமுயும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.