uma

ஸ்ரீயின் பேச்சு வேற கலவரத்தை உண்டு பண்ண, வெயிலும் குழப்பமும் சேர்ந்து தலைவலியோடு ஸ்ரீ வீட்டுக்குள் நுழைய. ” வா வா..” என்று .ஆர்வத்தோடு வரவேற்றாள் ஸ்ரீ.

“சாப்டியா ?”

“இல்ல ஸ்ரீ நேரா இங்க தான் வர்றேன்.”

“சரி சாப்பிடு… “

“வேண்டாம்..  தலைவலி சாப்டா வாமிட் தான் வரும” – . சொல்லிகொண்டே அமர்கிறாள்.

பக்கத்தில் வந்து ஸ்ரீயும் அமர, “சொல்லு எதுக்கு அபிநயா வரசொன்னாங்க… ” என்றாள்.

“அய்யோ ஸ்ரீ.. தலைவலி…. என்னால பேசமுடியாது!”

“ஏய்… சொல்லு… காபி போட்டு தரசொல்றேன்!”

வேலைக்கார அம்மாவை அழைத்து காபி கொண்டுவர சொல்ல…   காபி வந்தது.

காபியை பார்த்தவுடன் ஒரு முறை நாயகன் பேசியது நினைவுக்கு வருகிறது….  காரணமே இன்றி.!

அடுத்தடுத்த தோல்விகள் எவ்வளவு மன வலிமையான நபரையும் சற்று தடுமாற செய்கிறது. அப்படி ஒரு சூழலில் நாயகனோடு பேசுகிறாள்.  அவன் தான் இவள் ஆன்மா ஆச்சே !

“என்னலூசு… டல்லா இருக்க ? ” என்கிறான் நாயகன்.

“ஒன்னும் இல்ல. ..”

“ச்சீ… உன்னால என்னை தவிர யார்கிட்டயும் பேசமுடியாதுனு தெரியும் சொல்லு லூசு…”

சில விசயங்களை சொல்லிமுடித்த நாயகி, “ஹூம்… என்ன வாழ்க்கைன்னு தோணுது.  செத்துட்டா கூட பெட்டர் ன்னு இருக்கு…”  என்கிறாள் விரக்தியாக.

“சரி விடு! நானே உன்ன கொன்னுடுறேன்..!” புன்னகையுடனே சொல்கிறாைன் நாயகன்.

“கொன்னுடுவீயா !?” – கிண்டலாகவே கேட்கிறாள் நாயகி.

“ம்… ஒரு மூட்டை வேர்கடலை கொடுத்தா போதும்..  உன்ன ஈசியா கொன்னுவேன்!”

“அடப்பாவி… அவ்வளவு ஈசியா உனக்கு கொல்றது.”  நாயகி சிரித்துக்கொண்டே கேட்க. ” உன்ன கொல்றது ஒரு பெரிய விஷயமே இல்ல” என்கிறான் நாயகன் மீண்டும் புன்னகைத்தபடியே.

: எப்படி.. எப்படி.. சொல்லு.. சொல்லு.. ” ஆர்வத்துடன் கேட்கிறாள் நாயகி.

” உன்ன அசிங்க அசிங்கமா திட்டிட்டு,  நான் உன்ன block பண்ணினாலே போதும்!  நீயே செத்துடுவே!”

” ம்… அப்பறம் !?”  –  குழந்தை போல கேட்கிறாள் நாயகி.

அன்று இருந்த இறுக்கமான மனநிலை அவனின் பேச்சில் மாறியது நினைவுக்கு வருகிறது.

நினைவுகளில் மூழ்கியிருந்த நாயகியை நிஜத்திற்கு கொண்டுவருகிறாள் ஸ்ரீ.  “என்ன காபிய கையில வச்சிக்கிட்டு யோசனை…?”

“எல்லாம் அந்த காபி கமெடி தான் ஸ்ரீ!”

“காபி கமெடியா !! “

“ஆமா…  சரி   அதைவிடு நீ என்னவோ சொல்லனுன்னு சொன்னீயே என்ன ஸ்ரீ ?”

“எங்க  அத்தை கால் பண்ணாங்க…  ரெண்டு நாளா  இந்த பிரச்சினைய பத்தித்தான் பேசிக்கிட்டிருக்காங்க..!ட

“ரெண்டு நாளாவா !? ” என்று அதிரச்சியுடன் கேட்ட நாயகி அமைதியாகிறாள்…

எதையும் தன்னிடம் மறைக்காத தோழி ஸ்ரீ  என்று நினைத்திருந்த  அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தருகிறது

அடுத்தடுத்த ஏமாற்றங்களுக்கும், அதிர்ச்சிகளுக்கும் அதுதான் முதல் படி என்பது அப்போது நாயகிக்கு தெரியவில்லை.

(அடுத்த பகுதி வரும் திங்கள் அன்று..)