ந்த வருடம் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது.     தைப்பூசத்துக்கு இரு விசேஷங்கள் உண்டு.   முருகனுக்கு உகந்த நாள் என்பது ஒன்று.   வடலூர் ராமலிங்க அடிகளார் ஞான சபையின் ஜோதி தரிசனம் என்பது மற்றொன்று.   ஆனால்  அதைத் தவிரவும் பல விசேஷங்கள் அடங்கிய தினமாக தைப்பூசம் உள்ளது.

தமிழ்ப் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதமான தை மாதம் பூசா மாதம் என அழைக்கப் படுகிறது.   பூச நட்சத்திரத்தின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.    பௌர்ணமி திதியும்,  பூச நட்சத்திரமும் இந்த மாதத்தில் ஒரே நாளில் வருவது வழக்கம்.    அனைத்து முருகன் கோவிலிலும் இந்த தினம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

தைப்பூச நாளின் மற்ற சிறப்புக்கள் இதோ :

தைப்பூச தினத்தன்று தான் இறைவன் இந்த உலகத்தை படைத்ததாக ஒரு ஐதீகம் உள்ளது.

தைப்பூசத்தன்று தருகாசூரனை முருகப் பெருமான் வதம் செய்தார்

சிவபெருமான் பார்வதியுடன் சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம் ஆடிய தினம் தைப்பூசம் ஆகும்

சிதம்பரத்தில் பல திருப்பணிகளை செய்த அரசன் இரணியவர்மன் நடராஜ தரிசனம் கிடைக்கப் பெற்றது தைப்பூச நன்னாளில் தான்.

குரு பகவான் என அழைக்கப்படும் பிரகஸ்பதிக்கு உகந்த நாள் தைப்பூசம் ஆகும்.

வடலூர் ராமலிங்க சாமிகள் தைப்பூசத்தன்று ஒளியாக மறைந்தார்.

முருகனுக்கு விரதம் இருப்போர் தைப்பூசத்தன்று விடியற்காலை எழுந்து குளித்து விட்டு முருகனை வழிபடுவார்கள்.  இன்று நடைபெறும் அனைத்து முருகன் பூஜைகளிலும் கலந்துக் கொள்ள வேண்டும்.  ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடுவது சிறந்ததாகும்.   இன்று முருகன் கோவிலில் காவடி எடுப்பது,  பால் குடம் தூக்குவது போன்றவை நடைபெறும்.

தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகன் கோவில்களிலும் மட்டுமின்றி  இலங்கை, மலேசியா, பினாங்கு போன்ற இடங்களிலும் தைப்பூசம் விமரிசையாக கொண்டாடப் படுகிறது.

இந்த வருடம் தைப்பூச தினத்தன்று முழு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது.   அதனால் இந்த தினத்தில் உச்சரிக்கப்படும் முருகன் துதிகளுக்கு பல மடங்கு பலன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.