ஸ்ரீநகர்,

ம்மு காஷ்மீர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பசு பாதுகாப்பு அமைப்பினரால் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் பாரதியஜனதா தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றதிலிருந்து, பசு பாதுகாப்பு அமைப்பினரால் வட மாநிலங்களில் ஏழை மக்களின்மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜம்முவில் உள்ள ரெய்சி மாவட்டத்தில் உள்ள தல்வாரா ஏரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது பசு பாதுகாப்பபு (gau rakshaks) அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் 9 வயது சிறுமியையும் தாக்கி உள்ளனர். தாக்குதலுக்கு ஆளான குடும்பத்தினர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலுக்கு ஆளான குடும்பத்தினர் அந்த மாவட்டத்தை சேர்ந்த நாடோடிகள் என்று கூறப்படு கிறது. அவர்களின் முதன்மையான தொழிலே ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக விளை நிலைங்களை நோக்கி கொண்டு செல்வதுதான்.

இவர்கள் மீது பசு பாதுகாப்பு அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருப்பது அந்த பகுதியில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.