நடிகர், இசையமைப்பாளர் என்பதைத் தொடர்ந்து இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார் தர்புகா சிவா.

சமீர் பரத் ராம் தயாரித்துள்ள ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் இயக்குனராக உருவாகியுள்ளனர் .

இந்தப் படத்துக்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் பொறுப்பு மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் தர்புகா சிவா.

தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மாதவன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரின் மூலம் முழுக்க பள்ளி மாணவர்களுக்கு இடையே நடக்கும் கதை என்பது தெளிவாகியுள்ளது.

இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.