முந்தைய போட்டியில் எடுக்கப்பட்ட படம்
முந்தைய போட்டியில் எடுக்கப்பட்ட படம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது. அந்த சங்கததைச் சேர்ந்த சரத்குமார், கருணாஸ், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டிடுகின்றார்கள். ஆகவே, இந்த சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும் என, தமிழ்நாடு பால் முகவர்கள் – தொழிலாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ. பொன்னுசாமி,  தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருக்கிறார்.
பொன்னுசாமி அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
“சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 17ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதாக ஊடக செய்திகள் மூலம் அறிந்தேன்.  இந்த. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் பல உறுப்பினர்கள் ஆளுகட்சிக்கு ஆதரவானவர்கள். தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் நடிகர் நடிகைகள் பங்குபெறும் நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு போட்டி நபடந்தால், அது ஆளும்கட்சிக்கு ஆதரவான பிரச்சாரம் போல் ஆகிவிடும்.
தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பதவியில் இருக்கும் நடிகர் கருணாஸ், முன்னாள் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகை சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் வரக்கூடிய  தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்கள்.
ஆகவே, நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கெட்  போட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. மேலும்,  சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே இந்த போட்டியை தேர்தல் கமிசன் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.