டில்லி:

விண்வெளி ஆடை தயாரிக்க நாசாவுக்கு தாங்கள்தான் காப்பர் (செம்பு) தகடுகள் சப்ளை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த தந்தை மகனை டில்லி மாநில போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

டில்லியை சேர்ந்த மோட்டார் மெக்கானிக்குகளான விரேந்தர் மோகன் மற்றும் அவரது மகன் நிதின் ஆகியோர், தொழிலதிபர்களிடம் காப்பர் தகடுகளை காட்டி, இதுபோன்ற தகடுகளை நாங்கள் நாசாவுக்கு விற்பனை செய்து வருவதாகவும், இதன்மூலம் நாசா சிறப்பு ஆடைகளை தயாரித்து வருவதாகம் கூறி  மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் தங்களது வாய் ஜாலம் மற்றும், போலியான ஒரு விண்வெளி உடையை அணிந்து காட்டியும், சில வித்தைகள் காட்டியும் தொழிலதிபர்களை நம்ப வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்களது நடவடிக்கையை கண்டு ஏமாந்த தொழிதிபர்கள் சிலர்,  பல்வேறு கட்டமாக ரூ.1.43 அளவிலா கோடிபணத்தை கொடுத்துள்ளார். ஆனால், அவர்களிடம் இருந்து முன்னேற்ற மான தகவல்கள் ஏதும் வராததால், தொழிலதிபர்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்டு வந்த தந்தை மகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.