பாலசுப்பிரமணியன் (Bala Subramanian) அவர்களின் முகநூல் பதிவு:
1
இது மாநிலத்தில் உள்ள நிரந்தர சபை. இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடுவதில்லை, இவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்நதெடுக்கப்படுகின்றனர். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 1/3 பங்குக்கு மேர்படாமல் இருத்தல் வேண்டும். 1/3 பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்றங்களினாலும் 1/12 பங்கு உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள பல்கலைக் கழக பட்டதாரிகளாலும், 1/12 பங்கு உறுப்பினர்கள் ஆசிரியர்களாலும், 1/3 பங்கு உறுப்பினர்கள் மாநில கீழவை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.சமூக சேவை, கலை, விஞ்ஞானம் ஆகியவற்றில் சிறந்தவர்களில் இருந்து மேலும் 1/6 பங்கு உறுப்பினர்கள் மாநில ஆளுனரால் நியமிக்கப்படுவர். மேலவை உறுப்பினர் 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். இவர் மத்திய, மாநில அரசுகளில் எந்த அலுவல் புரிபவராகவும் இருத்தல் கூடாது. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். 1/3 பங்கு உறுப்பினர்கள் ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்கள். ஆகவே இது நிரந்தர சபையாகும், இதன் உறுப்பினர்கள் மேலவைத் தலைவரையும், துணைத்தலைவரையும் அவர்களுக்குள் தேர்ந்தெடுப்பார்கள். மேலவைத் தலைவர் சபையின் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குவார். தமிழ்நாட்டில் 1986ம் ஆண்டு சட்டமேலவை கலைக்கப்பட்டது.
மீண்டும் மேலவை கொண்டுவரப்படுவது இன்றைய நிலையில் மிகவும் அவசியம் அரசியல்வாதிகளுக்கு கடிவாளமாக இருக்கும் மேலவை அமைக்க கோருவோம்