aa

தாத்ரி படுகொலை மதம் அல்லது அறம் தொடர்பான விஷயம் மட்டுமன்று. பரிவார ரௌடிகளுக்கு பயந்து பலர் எருமை மாட்டிறைச்சியைக் கூட விற்க முன்வருவதில்லை. மாடுகளை ஊர் விட்டு ஊர் எடுத்துச் செல்லும் வான்/லாரிக்காரர்கள் கைதாகலாம், கொல்லப்படலாம் என நடுநடுங்கிக்கொண்டிருக்கின்றனர்.

எனவே அப்போக்குவரத்தும் குறைந்து வருகிறது. பரிவார அட்டகாசத்தினால் மாட்டுத் தோல் அருகி வருகிறது, விலை ஏறுகிறது, தோல் பொருட்கள் ஏற்றுமதி அடி வாங்குகிறது.

தற்போதைய ரகளைகளின் விளைவாய் இத் தொழில் ஒரேயடியாய் நசித்துவிடும் வாய்ப்பு, அதனால் அத் தொழிலில் பிழைத்துவரும் பல லட்சக் கணக்கானோரின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும்.

பொதுவாக விவசாயிகள் வயதான பசுக்கள், காளைகள், எருமைகளை கசாப்புக்கடைக்காரர்களுக்கு விற்பார்கள். இதன் விளைவாகவே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. இப்போதோ வயதான மாடுகளை வாங்க ஆளே இல்லை. மாட்டுச் சொந்தக்காரர்களின் பொருளாதார நிலை சரிவடைகிறது.

தாத்ரி பொருளாதார ரீதியாக நாட்டைக் கடுமையாக பாதிக்கும்போது அரசியல் ரீதியாகவும் மோடிக்குப் பெரும் பின்னடவைக் கொடுக்கும் என்கிறார் பிரபல பொருளாதார வல்லுநர் ஸ்வாமிநாதன் அய்யர்.

Gopalan TN https://www.facebook.com/gopalant?fref=ts