புதுடெல்லி:

ஆன்மீகத் தலைவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவதற்காக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ரூ.13 லட்சம் செலவழித்துள்ளதாக அங்கு பயிலும் மாணவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்க நிதி இல்லை என பல்கலைக்கழகம் கூறியது.
இதையடுத்து அங்கு பயிலும் மாணவர்கள் நிதி பயன்பாடு குறித்து, தகவல் அறியும் சட்டத்தின்படி பல்கலைக்கழக நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்டனர்.
அவர்கள் அளித்த பதிலில், ஆன்மீகத் தலைவர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தியதற்கு ரூ. 13 லட்சம் செலவானதாகவும், ஒருவருக்கு மட்டும் விமானச் செலவு ரூ. 87 ஆயிரம் ஆனதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இப்பல்கலையின் நிதி மோசடியைக் கண்டித்து வரும் 8 மற்றும் 9 தேதிகளில் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.