கல்கத்தா,
ரே நாளில் மேற்கு வங்காளத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது மாரடைப்பு ஏற்பட்டு அரசு ஊழியர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏ.டி.எம் மையம் ஒன்றில் வரிசையில் நின்ற மாநில அரசு ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசம் என கூறியுள்ள  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி இதனை கவனிக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
mamtha
கொல்கத்தாவை சேர்ந்த அரசு ஊழியர்  கல்லோல் ராய்சவுத்ரி (வயது 56).  இவர் கல்கத்தா செல்வ தற்காக, பண்டல் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் முன்பு  காலை 7.35 மணிக்கே வரிசை யில் நின்றுள்ளார்.
நின்ற கொஞ்ச நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார்.  அவர் மயங்கி கிடந்ததை யாரும் கவனிக்கவில்லை. அதன்பின் ஏ.டி.எம்.மின் பாதுகாப்பு அதிகாரி இதை கவனித்து அருகில் உள்ள மருத்துவர் ஒருவரை அழைத்து சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார்.
ஆனால், மருத்துவர் சோதித்தபோது சவுத்ரி உடலில் உயில் இல்லை. இதனால் அவரது உடல் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

ஏடிஎம் வரிசையில் மரணம் அடைந்த அரசு ஊழியர்
ஏடிஎம் வரிசையில் மரணம் அடைந்த அரசு ஊழியர்

இந்த துயர சம்பவம் குறித்து, மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,
இந்த  துரதிர்ஷ்டவசமான மரண எண்ணிக்கை  நாடுமுழுவதும் தொடர்கிறது.  கல்லோல் சவுத்ரி என்ற மாநில அரசு ஊழியர்,  பண்டல் ரெயில் நிலையத்தில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். முன்பு மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.  அவரது குடும்பத்திற்கு தனது இரங்கல் என்று தெரிவித்துள்ள மம்மா,
பிரதமர்  மோடி அவர்கள் இதனை கவனிக்கிறாரா? என கேட்டுள்ளார்.
இதே போல் மேற்கு வங்காளத்தின் தெற்கு பர்கானஸ் மாவட்டத்தில் நேற்று பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். முன் வரிசையில் நின்ற 2 முதியவர்கள் மரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.