தூத்துக்குடி:

மிழக பாஜக சார்பில் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை நிறுத்தப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடி வந்த அவருக்கு, பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய தமிழிசை, பாஜக பாசிச கட்சி கிடையாது, பாசமுள்ள கட்சி என்று கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தூத்துக்குடி தொகுதியில் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியவர் . மக்கள் எனக்கு ஆதரவு தருவார்கள் என்றார்.

இந்த பகுதி முன்னேற்றம் அடையவேண்டும் என்றும், அதற்காக,  இங்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு பொருளாதாரத்தை எப்படி உயர்த்துவது எப்படி என்பது குறித்து வி‌ஷன் டாக்குமென்ட் தயார் வைத்திருப்பதாக தெரிவித்தார். அந்த விஷன் டாக்குமென்டை வரும் 26ந்தேதி தூத்துக்குடி யில் மந்திரி பியூஸ்கோயல் வெளியிடுவார் என்று கூறினார்.

தான்  நான் நேர்மாறான அரசியல் செய்யவே விரும்புகிறேன். எதிர்மறையான அரசியல் செய்ய மாட்டேன் என்றவர், மக்கள் எளிதில் அணுக கூடிய சாதாரண பெண்ணாகவே இருப்பேன் என்றார்.

வருகிற 25-ந்தேதி எனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதன்பிறகு தொடர் பிரசாரம் மேற்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது  மத்தியில் பா.ஜனதாவும், மாநிலத்தில் அ.தி.மு.க.வும் ஆட்சி புரிவதால் மக்களுக்கு நலல பல திட்டங்களை கொடுக்க முடிகிறது. பா.ஜனதாவை பொறுத்தவரை  இது பாசிச கட்சி அல்ல. பாசமுள்ள பா.ஜ.க. என்றவர்,  பிரதமர் மோடியை ஸ்டாலின் சுயநலவாதி என்கிறார்.  ஆனால், வாரிசுக்காக சுயநலத்துடன்  பல சலுகைகளை அளிப்பவர் ஸ்டாலின். ராகுல்காந்தியை பிரதமராக ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்பத்திற்கு, வாரிசுக்கு என எதையும் செய்யாதவர் மோடி.

இவ்வாறு அவர் கூறினார்