கோழிக்கோடு

மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகள் இடையே கேரளாவில் ரகசிய உடன்பாடு உண்டானதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வரும் 6 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியை போல் கேரளாவிலும் ஒரே கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளன.  இம்மாநிலத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக அணிகள் களத்தில் உள்ளன.  கேரளாவில் தேர்தல் பிரசாரம் மிகவும் தீவிரமாக நடந்த வருகிறது.

அவ்வகையில் கேரளாவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார்.  அவர் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொயிலாஞ்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.  அவர் தனது உரையில், “பிரதமர் மோடி அடிக்கடி காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் எனக் கூறி வருகிறார்.   ஆனால் மார்க்சிஸ்ட் இல்லாத இந்தியா என எப்போதாவது சொல்லி இருக்கிறாரா?

காரணம் கேரளாவில் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே ரகசிய உடன்பாடு இருந்து வருகிறது.   பாஜக காங்கிராச்சை அழிக்க எண்ணுவதற்கு இதுதான் காரணமா?   ஆனால் காங்கிரஸைப் பொறுத்த வரை தேவையற்ற குற்றச்சாட்டுக்களைக் கூறுவதை விட வளர்ச்சி திட்டங்கள் குறித்தே காங்கிரஸ் விரும்புகிறது” எனத் தெரிவித்துள்ளார்.