rama1
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்கின்ற அறிவுரைகளை வழங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இரண்டு கட்டங்களாக 117 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 90 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். பாமக வேட்பாளர்கள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது பற்றி அவர்களுக்கு ஆலோசனையும், வழிகாட்டுதலும் வழங்கும் நோக்குடன் கலந்தாய்வுக் கூட்டம் தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மேலும், தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, தேர்தல் நடைமுறைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்