uli1
விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் மாற்றம் 4, 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு பா.ம.க. வேட்பாள ராக இரா.ராமமூர்த்தி அறிவிக்கப் பட்டிருந்தார். இந்த நிலையில் உளுந்தூர் பேட்டை தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உளுந்தூர்பேட்டை தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார். இப்போது அவருக்கு பதிலாக பா.ம.க. செய்தி தொடர் பாளரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை மாநிலத் தலைவருமான சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் கே.பாலு புதிய வேட்பாள ராக அறிவிக்கப்பட்டுள் ளார்.
இவ்வாறு அவர் கூறி னார்.
டாக்டர் ராமதாஸ் பா.ம.க. போட்டியிடும் 4, 5-வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
1. கிணத்துக்கடவு – சின் னச்சாமி (ஒன்றியச் செய லாளர்)
2. சிங்காநல்லூர்- அசோக் ஸ்ரீநிதி (மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்)
3. பொள்ளாச்சி – கண்ணப்பன் (மாவட்ட கொள்கை விளக்க அணித் தலைவர்)
4. திருக்கோவிலூர்- பால. சக்தி (மாவட்டத் தலைவர்)
5. திருவாடானை – வே. பாண்டி (முன்னாள் நகரத் தலைவர்)
6. பவானி – ராமநாதன் (முன்னாள் எம்.எல்.ஏ.)
7. அந்தியூர் – கோபால் (மாவட்டச் செயலாளர்)
8. சேலம் தெற்கு – குமார் (மாவட்ட வக்கீல் சங்கத் தலைவர்)
9. முசிறி – மனோகரன் (மாநில துணைத் தலைவர்)
10. வேளச்சேரி – வினோபா பூபதி.
11. மயிலாப்பூர் – மீனாட்சி அனந்த்
12. சைதாப்பேட்டை – சகாதேவன் (சென்னை மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்)
13. விருகம்பாக்கம் – ஜெயராவ்.
14. அண்ணாநகர் – அகிலேஷ் அரனி மல்லிச்செடி.
15. ஆயிரம்விளக்கு- ரங்க நாதன் (எ)ரங்கன் (மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைத் தலைவர்)
16. ராயபுரம் – பெருமாள் (சென்னை மாவட்டச் செயற் குழு உறுப்பினர்)
17. வில்லிவாக்கம் – சுப்பிரமணியன் (தென் சென்னை தெற்கு மாவட்டத் தலைவர்)
18. பெரம்பூர் – வெங்க டேசன் பெருமாள் (வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்)
19. ஆவடி – அனந்தகிருஷ்ணன்.
5-வது பட்டியல்
1. தருமபுரி – டாக்டர் செந்தில் (முன்னாள் எம்.பி.)
2. பாலக்கோடு – சரவணன் (மாநில துணைப் பொதுச்செயலாளர்)
3. பாப்பிரெட்டிப்பட்டி – சத்தியமூர்த்தி (பேரூர் செயலாளர்)
4. அரூர் (தனி)- முரளி (மாவட்டச் செயற்குழு உறுப்பினர்).