துரை

பிரபல நகைச்சுவை நடிகர் அல்வா வாசு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இனி சிகிச்சை பலனில்லை என வீட்டுக்கு அனுப்பட்ட நிலையில் இறுதிக் கட்டத்தில் உள்ளார்

நடிகர் அல்வா வாசு 900 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.  நகைச்சுவை, மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.   முதலில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.  பின் நடிகராக மாறினார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இவர் அருணாச்சலம், சிவாஜி போன்ற படங்களீல் நடித்ததும், மற்றும் அமைதிப்படை உட்பட பல சத்யராஜ் நடித்ததும் குறிப்பிடத் தக்கவை.

இவர் ஆறு மாதங்களுக்கும் மேலாக மதுரை மீனாட்சி மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார்.   இந்நிலையில் இன்று அவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும்,  இனி சிகிச்சை அளிக்க முடியாது என்றும் கூறி உள்ளனர்.  மேலும் விரைவில் உயிர் பிரிந்து விடும் எனவும் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் படி மருத்துவமனையில் அறிவித்ததாக அவர் மனைவி அமுதா வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

அல்வா வாசுவுக்கு கிருஷ்ணஜெயந்திகா என ஒரு மகள் உள்ளார்.