https://twitter.com/karanjohar/status/1223846991739801600

அயன் முகர்ஜி இயக்கத்தில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இருவரும் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படம் ‘பிரம்மாஸ்திரா’.

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2020-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அயன் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.