டெல்லி: எஸ் பேங்க் வீழ்ச்சிக்கு பிரியங்கா காந்தியிடம் இருந்து ராணா கபூர் வாங்கிய ஓவியமே காரணம் என்று பாஜக பிரச்னையை திசை திருப்புவதாக காங்கிரஸ் பதிலடி தந்திருக்கிறது.

வாராக்கடன் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வந்தது எஸ் பேங்க். தற்போது ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவரப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மற்றும் பிஎன்பி வங்கிகளுக்கு ஏற்பட்ட அதே கதி இப்போது ஏற்பட்டுள்ளது. ராணா கபூர் என்பவரின் செயல்பாட்டால் எஸ் பேங்க் பெரும் வளர்ச்சி அடைந்த அதே வேகத்தில் வீழ்ந்து இருக்கிறது.

இந்த வங்கியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று பலவாறான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்க, பாஜகவோ காங்கிரஸ் தான் என்று ஒரு புதிய விஷயத்தை முன் வைத்து இருக்கிறது. எஸ் பேங்கின் இந்த வீழ்ச்சிக்கு பாஜகவே காரணம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இப்படி இரு தரப்பினரும் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதில் முக்கியமாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறது. பிரியங்கா காந்தியிடம் இருந்து யெஸ் பேங்க் உரிமையாளர் ராணா கபூர் 2 கோடி ரூபாய்க்கு வாங்கினார். அதனால் தான் வங்கிக்கு சிக்கல் ஏற்பட்டு இதுபோன் நடக்கிறது என்று பாஜக கூறி இருக்கிறது.

அதாவது பிரபல ஓவியர் எம்எப் உசேன், ராஜீவ் காந்தி உயிரோடு இருக்கும் போது ஒரு ஓவியத்தை பரிசாக அளிததிருந்தார். அவரது மறைவுக்கு பிறகு, அந்த ஓவியத்தை பிரியங்கா காந்தி பராமரித்து வந்தார். அந்த ஓவியத்தை எஸ் பேங்க் உரிமையாளர் ராணா கபூர் வாங்கினார்.

அதனால் தான் எஸ் பேங்க் வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று பாஜக ஊடகங்களில் ஒரு பிரச்சாரத்தை முன் எடுத்துள்ளது. எஸ் பேங்க் வீழ்ச்சிக்கு பாஜக காரணமல்ல… காங்கிரஸ் தான் என்று கூறி வருகிறது. நாட்டில் முக்கிய பிரச்னைகள் எழும் போது, கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற தந்திரங்களை பாஜக செய்கிறது என்று காங்கிரசும் பதிலடி தந்திருக்கிறது.