index

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கியது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை சேர்த்து 8.86 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 4000 க்கும் மேற்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடக்காமலிருக்க பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முறைகேடுகள் ஏதும் நடந்தால், அதில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . தேர்வு காலை 10 மணி முதல் 1.15 மணி வரை தினசரி நடைபெறும். மாணவர்கள் 10 மணிக்கு முன்னதாக தேர்வு மண்டபத்துக்குள் நுழைய வேண்டும். 15 நிமிடங்கள், கேள்வி தாள் படிப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
தேர்வைப் பற்றிய அனைத்து அறிவுரைகளையும், இந்த ஆண்டு ஹால் டிக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பத்திரிகை டாட் காம்மின் வாழ்த்துகள்.