beer

அமெரிக்கா ஐடஹோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பீர் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தவல்லது என்று கண்டுபிடித்துள்ளனர். பீரில், ஒரு முக்கிய மூலப்பொருள் உள்ளது, அதன் பெயர் ஹாப்ஸ் என்று கூறியுள்ளனர் . அது பாக்டீரியா வளர்ச்சி மற்றும் நோய் நிறுத்தும் திறன் உள்ளது, அந்த அமிலமானதே பீரில் கசப்பான சுவையையும் கொடுக்கிறது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளை வரவிருக்கும் அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின் தேசிய கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளப்போவதாக கூறினர்.
ஹாப்ஸ், ஹுமுலோன்ஸ் மற்றும் லுபுலோன்ஸ் கொண்டுள்ளது. விஞ்ஞானிகள் இந்த அமிலத்தை மருந்தாக்க முடியும் என்று நம்புகிறார்கள். உயிரியலாளர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுடன் இனைந்து இந்த மருந்தை தயாரித்துக் கடைகளுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினர்.
புற்று நோய் தடுக்கும், சரி…கல்லீரலென்னாகும்?