,

ஜலந்தர்:
புவி ஈர்ப்பு எதிர் விசை குறித்து இயற்பியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டனுக்கு தெரியாது என்று தமிழக விஞ்ஞானி கண்ணன் ஜெகதால கிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜகர்தலாவில் நடந்த 106 வது இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிய அவர் மேலும் கூறியதாவது;
இயற்பியல் குறித்து என்னுடைய கண்டுபிடிப்புகளுக்காக நிறைய நேரத்தை செலவிட்டுள்ளேன். என்னுடைய ஆராய்ச்சி ஏற்றுக் கொள்ளப்பட்டால், இதுவரை இயற்பியல் குறித்த கருத்துகள் காணாமல் போய்விடும்.
புவி ஈர்ப்பு விசையைப் பற்றி ஐசக் நியூட்டனுக்கு கொஞ்சம் தெரியும். அவரது கணிப்புகள் சரியானவை. ஆனால், புவி ஈர்ப்பு எதிர் விசை குறித்து அவருக்குத் தெரியாது. ஈர்ப்பு விசை குறித்த பல கேள்விகளுக்கு அவரிடம் விடை இல்லை. சூரியன் மற்றும் மற்ற கோள்களைவிட விண்வெளி வலுவானது. அதனால் மற்ற கோள்கள் நகரும் போது அவற்றை ஒரே அழுத்தத்தில் வைத்துள்ளது.
தானாகவே வெற்றிடத்தைப் பூர்த்தி செய்துகொள்ளும் சக்தி விண்வெளிக்கு உண்டு. ஆனால் இந்த விசயம் நியூட்டன் மற்றும் எயின்ஸ்டீன் ஆகியோருக்கு புரியவில்லை. என்னை பொருத்தவரை, எதிர்காலாத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், அப்துல் கலாமை விட பெரிய விஞ்ஞானியாகலாம்.
புவி ஈர்ப்பு குறித்த எனது ஆய்வுகள் ஏற்கப்பட்டால், புவிஈர்ப்பு விசை நரேந்திர மோடி விசையாகவும், புவிஈர்ப்பு எதிர்விசை ஹர்ஷவர்தன் விசையாகவும் மாறும் என்றார்.