151217142352-wolf-1061-solar-system-large-169

“புதிய பூமி.. புதிய வானம்…” என்று உண்மையாகவே இனி பாடலாம்.  பூமிக்கு மிக அருகில் உயிரினங்கள வாழும் வாய்ப்புள்ள புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்!

ஆஸ்திரேலியாவில் உள்ளது யுனிவர்சிட்டி ஆஃப் நியூ சவுத் வேல்ஸ் (யு.என்.எஸ்.டபிள்யூ) பல்கலைக்கழகம். இந்த பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான், மனிதர்கள் வாழும் வாய்ப்புள்ள ஒரு புதிய கிரகத்தை   கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செந்நிற குறு நட்சத்திரங்களால் சூழப்பட்ட ‘‘ஒல்ஃப் 1061’’ என்ற 3 வெளி கோள்களில் இதுவும் ஒன்று. பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சியை வழிநடத்தும் டன்கேன் ரைட் கூறியதாவது:

“இந்த மூன்று கிரகங்களிலும் போதுமான அளவில் திட பொருட்களும், கற்களும் உள்ளன. ஆனால் சூப்பர் பூமி என்று அழைக்கப்படும் அந்த ஒரு கிரகத்தில் மட்டும் தான் பொன் நிற பகுதிகள் உள்ளன.  நட்சத்திரத்தில் இருந்து 14 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கிரகம் உள்ளது.

இந்த கிரகம் மிதமான வெப்பம் மற்றும் மிதமான குளிர் கொண்டதாக இருக்கிறது. . இது சூரியனை விட சிறியது.

இதர கிரகங்களில் உயிரினங்கள் வாழத்தக்க வகையில் இருந்தாலும், பூமிக்கு அருகாமையில் அவைகள் இல்லை. சூப்பர் பூமி மட்டுமே நம் உலகுக்கு அருகில் இருக்கிறது.

பூமியை விட 4 மடங்கு அடர்த்தி கொண்டதோடு, பாறைகளை கொண்ட மேற்பரப்பு இருப்பதால் இதை சூப்பர் பூமி என்று அழைக்கலாம்.

மேலும், விண்ணில் 1,870 கிரகங்கள் இருப்பதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் இந்த வெளிக் கோள் மட்டுமே பூமிக்கு அருகில் இருப்பதால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்த  ஆய்வுகள் தொடர்கின்றன.

இப்போதைக்கு, அங்கு உயிரினங்கள் வாழலாம் என்றும்  ஆனால் முழு வசதியுடன் வாழ முடியுமா என்பதை ஆய்வுகள் இன்று உறுதிபடுத்தவில்லை என்பதே விஞ்ஞானிகள் கருத்து.

இது போல் வாழத்தக்க கிரகங்கள் பல இருக்கலாம். ஆனால் அவை உள்ள இடங்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை”  – இவ்வாறு டன்கேன் ரைட் கூறினார்.

“இங்க வாழ பிடிக்கல வேற நாட்டுக்கு போறேன் என்பவர்கள், இனி, வேற கிரகத்துக்கு போறேன்”என்று  அறிக்கை கொடுக்கலாம்!