வாஷிங்டன்:

பூமிக்கு அருகில் பறக்கும் ராட்சத விண் கல்லை விஞ்ஞாணிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 1.92 லட்சம் கி.மீ., தொலைவில் பறக்கும் இந்த விண் கல் ‘2018 ஜிஇ3’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதன் அளவு 48 முதல் 110 மீட்டர் அகலம் இருக்கும் என்று நாசா மதிப்பீடு செய்துள்ளது. இது 1908ம் ஆண்டு ரஷ்யாவின் டுங்குஸ்காவில் 2 ஆயிரம் சதுர கி.மீ., அளவு கொண்ட சிபெரியன் வனப்பகுதியை தாக்கி சேப்படுத்திய விண் கல்லை விட 3.6 மடங்கும் அதிகமாகும்.

இந்த விண்கல்லை இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 12.11 மணிக்கு விஞ்ஞாணிகள் கண்டுபிடித்தனர். பூமிக்கும், சந்திரனுக்கு இடையிலான சராசரி தூரத்தில் இந்த விண் கல் பறந்ததை நாசா உறுதி செய்துள்ளது.

2013ம் ஆண்டு ரஷ்யாவில் விண் கல்லின் ஒரு பாகம் உடைந்து விழுந்து தாக்கியது. இதில் ஆயிரத்து 200 பேர் காயமடைந்தனர். ஆயிரகணக்கான கட்டடங்கள் இடிந்தன. இதன் தாக்கம் 93 கி.மீ., தொலைவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இதோடு ஒப்பிடுகையில் இந்த புதிய விண் கல் 3 முதல் 6 மடங்கு அதிகமாகும். கடந்த 21 மணி நேரத்திற்கு முன்பு தான் இந்த விண் கல் பூமிக்கு அருகில் பறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பூமியை தாக்குமா? அல்லது விலகிச் செல்லுமா? என்பதை அறியும் பணியில் நாசா விஞ்ஞாணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.