650x350_pilates_moves_that_get_results_slideshow
 
ப்போது உடலை கும்மென்று வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜிம்முக்கு செல்லும் பழக்கம் ஆண், பெண் இருவரிடத்திலும் அதிகரித்து வருகிறது. அதுவும்  அமெரிக்காவில் இது அதிகம்.
நல்ல விஷயம்தானே, என்று நினைத்தால், அதிலும் வில்லங்கம் இருக்கிறது என்கிறது ஒரு சர்வே!
“செக்ஸ் வைத்துக்கொள்வதற்காகத்தான் பலர், ஜிம்முக்கு செல்கிறார்கள்” என்கிறது அந்த சர்வே.  . பியூஷன் நெட் என்ற இணையதளம்தான் இந்த சர்வேயை எடுத்திருக்கிறது.
இது சொல்லும் செய்திகள் அதிர்ச்சி ரகம்!
ஜிம்முக்கு செல்லும் பெண்களில் 25 சதவீதம் பேர், செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக தான் அங்கு செல்வதாக தெரிவித்துள்ளனர்.  இவர்களில்  70 சதவீத பெண்கள் தங்களது தனிப்பட்ட பயிற்சியாளரிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள செல்வதாக சொல்லியிருக்கிறார்கள்.
உடற்பயிற்சியின் போது பயிற்சியாளர் உடலை தொட்டு தூக்கிவிடும் போது தங்களுக்குள் ஏதோ உணர்வு ஏற்படுவதாகவும் இவர்கள். கூறியிருக்கிறார்கள்.
ஜிம்முக்கு செல்லும் பெண்களில்  66 சதவீத பெண்கள், “ஜிம்மில் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
ஜிம் செல்லும் பெண்களில் பத்தில் ஒரு பெண் தனது ஹேண்ட்பேக்கில் காண்டம் கொண்டு செல்கிறார்.
82 சதவீதம் பேர் ஆன்லைன் டேட்டிங்குக்கு ஜிம் மிகவும் பயனுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
‘‘நீண்ட நேர உடற்பயிற்சியால் ஏற்படும் இதய துடிப்பு ஒருவரது சமூக நடவடிக்கையை மாற்றும் சக்தியை உருவாக்குகிறது. அவரது மன நிலையையும், நியாபக சக்தியையும் அதிகரிக்கிறது’’ என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதில் சில அறிவியலும் அடங்கி இருக்கிறது.
“முந்தைய ஆய்வுகளின் படி ‘‘உடற்பயிற்சி உடலில் உள்ள செரோடோனின் மற்றும் டோபமைன் ரசாயனங்களின் அளவை கூராக்குகிறது. இந்த ரசாயனம் மூளையில் உற்பத்தியாக கூடியது. இந்த மூளை நரம்பியல் மாற்றம் மனநிலையை மேம்படுத்தி ஆண்மையை ஊக்கப்படுத்தும்.
செரொடோன் ரசாயனம் என்பது நீண்ட நேர இதய உடற்பயிற்சி மூலம உருவாகக் கூடியது. அதோடு உடன்பட்ட சமூக நடத்தையையும் அதிகரிக்கும். டோபமைன் ரசாயனம் மனிதனின் மனநிலை மற்றும் நீண்ட கால நினைவாற்றலை அதிகரிக்கும். உடல் மற்றும் மன சோர்வு ஏற்படும் போது, இதய பயிற்சி செரோடோனின் உற்பத்தி அளவை அதிகரிக்கும்” என ஆராய்ச்சியாளர் ஜே.எம்.டேவிஸ் ஒரு கட்டுரையில் விளக்கமளித்தது, அமெரிக்கா இதழான கிளினிக்கல் நியூட்டிரிஷனில் வெளியாகியுள்ளது
ஹூம்.. என்னவோ போங்க..!