min-fox-cremation
பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சம உரிமை முற்றிலும் கிடைக்கவில்லையென்று பல பெண்கள் மிகுந்த வருத்தமும் கோபமும் கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு ஒரு மகாராஷ்டிர பெண்மணி ஒரு கோவிலின் கருவறைக்குள் தாம் ஏன் செல்லக்கூடாது என்று கேட்டபடியே, உள்ளே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வெளியில் தள்ளிய பின்பு, குருக்கள் பலர் சேர்ந்து கோயிலை சுத்தம் செய்துள்ளனர்.
பெண்கள் சில கோயில்களுக்குள் போக மட்டும் அனுமதி மறுக்கப்படவில்லை; தம் குடும்பத்தில் எவரேனும் இறந்த போதும் அவர்கள் சுடுகாட்டிற்குச் செல்லவோ, பிணத்தை தகனம் செய்வோ எரிக்கவோ கூட இந்த சமூகத்தில் அனுமதி மறுக்கபட்டுள்ளது. இந்த பழக்க வழக்கம் எப்பொழுது தொடங்கியது என்று ஒரு இந்திய இணையதளம் ஆராய்ச்சி செய்து, அதன் கண்டுபிடிப்புக்களை பகிர்ந்துள்ளது.
பார்க்கப்போனால் பெண்கள் சங்க காலங்களிலும் இலக்கியங்களிலும் ஒரு ஆண் மகனைப்போல சுடுகாட்டிற்குச் செல்லவும் பிணத்தை தகனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. நாளடைவில், ஆண் ஆதிக்க சமூகத்தில் பெண்களுக்கு இந்த உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. கீழ்வருமாறு சில பல காரணங்களையும் கதைகளையும் பெண்களுக்குக் கூறி, நம் சமூகம் அவர்களைத் தேற்றிவுள்ளனர்.

  • தகனம் செய்யும் ஒருவர் மகானாக இருந்தால், இறந்தவருடைய ஆன்மா சொர்கத்தை சென்றடையும்
  • தகனம் செய்வதென்பது ஒரு முக்கியமான சடங்கு, இதைச் சரிவர செய்யவில்லையென்றால் ஒருவரது ஆன்மா சாந்தியடையாது
  • இறந்தவர் விட்டுச் செல்லும் சொத்து, தகனம் செய்பவருக்கு சென்றடைவது வழக்கம்
  • வீட்டையும் குழந்தைகளையும் கவனிப்பது பெண்கள் பொறுப்பு, ஆகையால் அவர்கள் போகக்கூடாது
  • அதி முக்கியமான ஒன்றாக பெண்களின் இருதயம் மிக பலவீனமான ஒன்று, அவர்கள் சுடுகாட்டிற்குச் சென்றால் அவர்களுக்கு பேய் பிடித்துவிடும். ——- ஆகட்டும்,  சிரிப்பை அடக்கிக்கொண்டு இச்செய்தியை ஷேர் செய்யவும். 🙂

-ஆதித்யா