சென்னை:

மிழகத்துக்குள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச்சேர்நத 6 பேர் ஊடுருவி உள்ளதாக மத்திய புலனாய்வுத்துறை தமிழகஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அவர்கள் கோவையில் பதுங்கியிருக்கலாம் என்று தகவல் வெளியானது.

இதன் காரணமாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் கோவை மாவட்ட  காவல்ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாநகர காவல்ஆணையர் சுமித் சரண்,

இன்று நாடு முழுவதும் கிருண்ணஜெயந்தி கொண்டாடப்படும் வேளையில் கோவையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் கடல் வழியாக ஊடுருவி உள்ளதாக மத்திய புலனாய்வுத்துறை தமிழகஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் படி மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை கூறி உள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோவை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது இடங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர்.

கோவை மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் நாகப்பட்டினம், சென்னை போன்ற இடங்களில் கடும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த  நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர  காவல் ஆணையர் சுமித் சரண், 6 பயங்கரவாதிகள் கோவையில் ஊடுருவியிப்பதாக எச்சரிக்கை வந்துள்ளது என்பதை உறுதி செய்த நிலையில், ராணுவம் மற்றும் விமானப் படை தளங்களில் பாதுகாப்பை உஷார்நிலையில் வைக்குமாறு தகவல் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை என்றார்.

மேலும், பயங்கரவாதிகள் தொடர்பாக காவல்துறை எந்தவித புகைப்படங்களையும் வெளியிட வில்லை என்றும் விளக்கம் அளித்தார்