டில்லி

பாஜக அரசு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி வழங்க உள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையை பொது நிதி நிலை அறிக்கை என குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வந்தன.

வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி பாஜக அரசு தனது ஆறாவது நிதிநிலை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆயுட்காலம் 5 வருடங்கள் மட்டுமே என்பதால் ஆறாம் முறை நிதிநிலை அறிக்க சட்டப்படி இயலாது. ஆயினும் தேர்தல் வரும்வ்ரை இடைக்கால நிதிநிலை அறிக்கையை தற்போதைய அரசு தாக்கல் செய்ய முடியும்.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்த நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தை பொது நிதிநிலை அறிக்கை கூட்டம் என அழைக்குமாறு அரசு ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு வந்ததாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகின. எதிர்க்கட்சிகள் இந்த தகவலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் நிதித்துறை அமைச்சகம், “நாங்கள் அரசு ஊழியர்களுக்கு இது குறித்து எந்த ஒரு உத்தரவும் அளிக்கவில்லை. இந்த கூட்டத்தை ஊழியர்கள் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டம் என அழைக்கலாம். “ என உறுதி செய்தது. தற்போது பாராளுமன்ற அறிவிப்புக்களில் இடைக்கால நிதிநிலை அறிக்கைக் கூட்டம் என குறிப்பிடப்பட்டு வருகிறது.