சென்னை:

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். ரயில்வேயில் கூடுதல் பொறுப்பில் இருந்த அவர், பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இருப்பினும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் அவரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றம் வரை சென்றது.

ஆனால் பொன்.மாணிக்கவேல் நியமனத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதன்பின்னர், பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக போலீஸாரே புகார் தெரிவித்தனர். அவர் பணியின் போது துன்புறுத்துவதாக டிஜிபியிடம் புகார் தெரிவித்தனர். அவருக்கு ஒத்துழைக்கவும் மறுத்தனர். இந்நிலையில், இது குறித்து உயர்நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் இன்று முறையிட்டார்.
தனக்கு அலுவலகம் ஏதும் இல்லை என்றும், சக அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார். இதை கேட்ட உயர்நீதிமன்றம், பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தது.