லண்டன்:

செல்போன் பேசிவாறு காரை ஓட்டிய இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது.


கடந்த நவம்பர் 21-ம் தேதி டேவிட் பேக்கம் லண்டனில் செல்போனில் பேசியபடி கார் ஓட்டிக் கொண்டு சென்றார்.

அவரை மடக்கிப் பிடித்த லண்டன் போலீஸார், அவரை தெற்கு லண்டனில் உள்ள மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருடை ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.