மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1001 போலீசார் பாதிப்பு..

இந்தியாவில் நெம்பர் ஒன் மாநிலமாக கொரோனா தாண்டவமாடிவரும் மகராஷ்ட்ராவில் போலீசார் மத்தியில், கொரோனா, பெரும்  பீதியை  ஏற்படுத்தியுள்ளது.

அந்த மாநிலத்தில் கொரோனாவை தடுக்கும் முயற்சியில் போலீசாரின் பங்கு அளப்பரியது.

பாதிப்பும் அவர்களுக்கே அதிகம்.

அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை 8 போலீசார் உயிர் இழந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, 1,001 போலீசாரை கொரோனா தாக்கியுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து போலீசாரை பாதுகாக்கும் வகையில், ’’55 வயதுக்கு மேற்பட்ட போலீசார் வேலைக்கு வர வேண்டாம்’’ என்று அந்த மாநில அரசு ஆணையிட்டுள்ளது.

அவர்கள் சுமையைக் குறைக்கும் வண்ணம், மத்திய ஆயுத படையில் இருந்து 20 கம்பெனி போலீசாரை மகாராஷ்டிராவுக்கு அனுப்பி வைக்குமாறு மாநில அரசு கேட்டுக்கொண்டிருந்தது.

அதனை ஏற்று 4 கம்பெனி ராஜ்புத் அதிரடி படை வீரர்களை மத்திய அரசு மகாராஷ்டிராவுக்கு  அனுப்பி வைத்துள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்