💥த.மா.கா. மாநில மகளிர் அணி முன்னாள் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வரி, முன்னாள் மாநில பொதுச்செயலாளரும், பேராவூரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருஞானசம்பந்தம், பாபநாசம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவருமான ராம்குமார் ஆகியோர் முதல்வரை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவில் இணைந்த முன்னாள் தமாகா நிர்வாகிகள்
           அதிமுகவில் இணைந்த முன்னாள் தமாகா நிர்வாகிகள்

💥 டெல்லியில் மாநிலம் முழுவதும் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. எய்ம்ஸ் மேம்பாலம், ஐடிஒ பகுதி போன்ற பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அதில் சிறுவர்கள் விளையாடுகின்றனர். மேலும் ஐடிஒ பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
💥அவனியாபுரம்: கல்விக்கடன் துன்புறுத்தலால் பொறியியல் மாணவர் தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலை செய்துக்கொண்ட லெனின் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர். சிவில் என்ஜினியரிங் படிப்புக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் லெனின் கடன் பெற்றார். ரூ.1.90 லட்சத்தை உடனடியாக திருப்பிச் செலுத்த லெனின் பெற்றோருக்கு வங்கி நெருக்கடி கொடுத்தது. தனியார் வசூல் ஏஜென்ட் மூலம் லெனின் மதிப்பெண் சான்றிதழ்களையும் பறித்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. சான்றிதழ்கள் பறிக்கப்பட்டதால் மனம் உடைந்த லெனின் தற்கொலை செய்துக்கொண்டார்.
💥சேலம்: திருப்பூரில் ரூ.6 கோடி கேட்டு காரில் கடத்தப்பட்ட தொழிலதிபரை, சேலம் ஆத்தூர் அருகே கடத்தல் கும்பல் விட்டுவிட்டுச் சென்றுள்ளது. இக்கும்பலை போலீசார் வலைவீசி தேடி வரூகின்றனார்.
💥திருப்பூர்: மருத்துவ மாணவர் சரவணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் சரவணனின் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
💥கபாலி… முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன டிக்கெட்டுகள்!
💥உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை அருகே ராணுவப் பள்ளி விடுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு செய்துவருகிறார். விடுதியில் சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவன் சித்தார்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 13 மாணவரை சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரித்து வருகிறார்.
💥காஷ்மீரில் நடத்தப்பட்டு வரும் போராட்டம், சுதந்திர போராட்டம். இந்த சுதந்திர போராட்டத்தில் பர்ஹன் வானி ஒரு தியாகி. காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அனைத்து வகைகளிலும் ஆதரவு அளிக்கும்.இந்திய அளித்து வரும் கொடுமை இந்த சுதந்திர போராட்டத்திற்கு தூண்டுதலாக உள்ளது. காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமையான சுயஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கு ஒட்டுமொத்த பாகிஸ்தானும் அவர்களுடன் துணை நிற்கும்–பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்
💥சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார்தான் உண்மையான குற்றவாளியா  என திமுக தலைவர் கருணாநிதி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
💥அருணாச்சல் காங். சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து நபம் துகி ராஜினாமா ? அருணாச்சல் காங். சட்டசபை குழு புதிய தலைவராக பீம் காண்டு தேர்வு
💥வரும் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது : பொன். ராதாகிருஷ்ணன்
💥 கேரள முதல்வர் பேச்சு: குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைவதை ஏற்கமுடியாது. திருவனந்தபுரம் : விழிஞ்ஞத்திற்கு மிக அருகே குளச்சலில் துறைமுகம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கேரள  சட்டசபையில் முதல்வர் பினராய் விஜயன் கூறினார். குளச்சலில் (இனயம்)  வர்த்தக துறைமுகம் அமைவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது…
💥வன்னியர் சொத்துக்களை அபகரித்தவர் ராமதாஸ்… படையாட்சியார் பேரவைத் தலைவர் குற்றச்சாட்டு
💥 ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு…!
💥திருப்பூரில் ரூ.8 கோடி கேட்டு தொழிலதிபர் ஆறுமுகம் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
💥எனது வீடியோவை எடிட் செய்து வெளியிடுகின்றன என்று ஊடங்கள் மீது மத போதகர் ஜாகிர் நாயக் குற்றஞ்சாட்டி உள்ளார்.
Natham-Viswanathan
💥சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததன் மூலம் மின் வாரியத்திற்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான புகாரை, சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
💥உச்சநீதிமன்ற உத்தரவு படி பணி நிரந்தரம் செய்யாவிட்டால் அடுத்த மாதம் 15-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
💥ரயில்வே பாலம் அமைக்கும் பணியை முன்னிட்டு திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் சாலையில் வரும் 18ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
💥மதச்சார்பற்ற குடியரசு என இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதை கேவலப்படுத்தும் வகையில் தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை செய்யப்படுகிறது–திமுக தலைவர் கருணாநிதி
💥ஓசூரில், பத்து நாட்கள் நடக்கும் புத்தக திருவிழா நேற்று துவங்கியது.
💥குடி போதையில், பணிக்கு வந்த வேலூர் பார்ஸ்டல் பள்ளி சிறை காவலர் ரஜினிகாந்த்(30) சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
💥வசூர் ராஜாவின் கூட்டாளிகள், நான்கு பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர
💥காவேரி நடுவர் மன்றத்துக்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்- கலைஞர்