malaysia
வாஷிங்டன்:
மலேசிய அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களால் அந்நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாஸ்தாக் இணைய தளத்தில் இந்த தகவலை அமெரிக்காவின் டிஎம்எஸ் நிதியகத்தின் சிஇஓ பீட்டர் கோலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,‘‘ மலேசியாவில் பொருளாதாரம் தற்போது அனைத்து மட்டத்திலும் நல்ல நிலைமையில் இல்லை. கடந்த நவம்பர் மாதத்திலேயே தொழிற்சாலைகளின் உற்பத்தி நிலைமை சரிந்திருந்தது. மலேசியாவில் முதலீடு செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை நம்பிக்கை இருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பு தற்போது தவிடு பொடியாகிவிட்டது.
ஹூண்டாய் போன்ற நிறுவனங்களால் மலேசியா உற்பத்தி மையமாக விளங்கியது என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன். அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அரசியல் நன்கொடை தொகையான 2.6 பில்லிய, பிரதமர் தாதுக் ஷேரி நாஜிப் ரசாக்கின் தனிப்பட்ட கணக்குக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பயனளிக்காமல் போய்விட்டது. மலேசியாவின் ரிங்கெட் மதிப்பின் தற்போதைய நிலையும் மலேசியா மீதான தாக்கம் குறைய காரணமாகிவிட்டது.
நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் எவ்வளவு காலம் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் எனத் தெரியவில்லை. அதனால் வெளிநாட்டு சில்லரை முதலீட்டாளர்கள் தெளிவாக இருக்க  வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரதமர் நாஜிங்,‘‘ நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆயில் விலை குறைவு மற்றும் 2016ம் ஆண்டு பட்ஜெட் வரவுள்ள திருத்த அறிவிப்புகள், உலக பொருளாதாரத்தின் ஸ்திர தன்மை இல்லாமை போன்ற காரணங்களால் தான் மலேசியா பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது மலேசியாவின் தவறோ அல்லது பலவீனமோ அல்ல.  நாட்டில் அந்நிய சக்திகம் ஆதிக்கம் செலுத்துவதற்காக இது போன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன’’ என்றார்.