3

சென்னை:

டந்த ஒரு வாரமாக தமிழகம் முழுதும் கடும் மழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சென்னையிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. ஆகவே அங்கு வசித்த மக்கள்  தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்  இன்று மதியம் திடீரென, தனது ஆர். கே. நகர் தொகுதிக்கு விசிட் செய்தார் முதல்வர் ஜெயலலிதா. அப் பகுதியில் மழை வெள்ளத்தை பார்வையிட்டார். தனது வாகனத்தில்  அமர்ந்தபடியே சில இடங்களை பார்வையிட்டார். அப்போது மக்கள் அவரிடம் தங்களது கோரிக்கைகளை சொல்ல முற்பட்டனர். அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மக்களை தடுத்து திருப்பி அனுப்பினர். முதல்வர் ஜெயலலிதா புன்னகையுடன் கைகளால் கும்பிட்டபடி  அந்த இடங்களை கடந்தார்.

முன்னதாக, “மூன்று மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களில் கொட்டி தீர்த்து விட்டது.  பொதுமக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்: முதல்வர் வேண்டுகோள்   நிவாரண பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும்”  என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.