heart
சென்னை:
டுமையான மாரடைப்பு ஏற்பட்ட போதும் பஸ்ஸை ஓரம் கட்டி நிறுத்தி 50 பயணிகளை காப்பாற்றிய டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி நேற்று காலை 8.20 மணிக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. காலை 8.30 மணிக்கு மதுரவாயல் மார்க்கெட் அருகே சென்றபோது டிரைவர் சர்வேஸ்வரனுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
நெஞ்சுவலியால் அவதியுற்ற நிலையிலும், பஸ்ஸை சாலையோரம் ஓரம் கட்டி நிறுத்தினார். பயணிகளிடமும், கண்டக்டரிடம் தனக்கு நெஞ்சு வலிக்கறது என்று கூறியுள்ளார். பின்னர் அவரே பஸ்சில் இருந்து இறங்கி தனியார் மருத்துவமனைக்கு நடந்து சென்றார்.
அவருக்கு உதவியாக பயணிகளும், கண்டக்டரும் சென்றனர். உடனடியாக மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்தனர். ஆனால், வலி கடுமையானதால் சர்வேஸ்வரன் இறந்துவிட்டார்.
பின்னர் இது குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் வரும் வரை அவரால் காப்பாற்றப்பட்ட பயணிகள் அங்கேயே காத்திருந்தனர்.
சர்வேஸ்வரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு அலுவலக மன அழுத்தம் ஏதும் காரணமாக இருக்குமோ? என்ற கோணத்திலும் மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.