தராபாத்

டந்த நூறாண்டுகளில் முதல் முறையாக இந்திய விஞ்ஞான காங்கிரஸ் எனப்படும் விஞ்ஞானிகள் கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் நகரில் வரும் ஜனவரி மாதம் விஞ்ஞானக் கூட்டம் ஒன்று நடைபெற இருந்தது.   ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட இருந்த இந்த கூட்டத்துக்கு இந்திய விஞ்ஞான காங்கிரஸ் எனப் பெயர் ஆகும்.   இந்தக் கூட்டம் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.   இந்தக் கூட்டத்தை துவங்கி வைக்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்திருந்தார்.

தற்போது இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக  பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.  நூறாண்டுகளுக்கு மேல் நடைபெரும் இக்கூட்டம் இது  போல ஒத்தி வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.    இதற்கு காரணமாக மாணவர்கள் மோடிக்கும் தெலுங்கானா அரசுக்கும் எதிராக போராட்டங்கள் நடத்துவதை நிர்வாகம் கூறி உள்ளது.    வழக்கமாக வலது சாரிகளால் போராட்டம் நடத்தப்பட்டு அதன் காரணமாக பல்கலைக் கழக நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்படும் வேளையில் மாணவர்கள் போராட்டம் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் பல வினாக்களை எழுப்பியுள்ளது.

இது குறித்து ஒரு பெயர் தெரிவிக்க விரும்பாத சமூக ஆர்வலர், “ரோகித் வெலுமா தற்கொலையின் காரணமாக மாணவர்கள் இடையே அரசுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   வலது சாரிகளின் நியாயமற்ற போக்கினால் அவர் தற்கொலை செய்துக் கொண்டதும்,  பாஜக வின் கூட்டணி கட்சி ஆளும் தெலுங்கானா அரசில் வேலைவாய்ப்புக்கள் குறைந்துள்ளதும்  மாணவர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.

தற்போது மாணவர்களும் இளைஞர்களும் வலுவான சக்தியாக எழுந்துள்ளனர்.   இவர்கள் மோடி, அவருடைய மதவாத போக்கு மற்றும் மக்களுக்கு எதிரான அவரது ஆட்சியின் திட்டங்கள் ஆகியவைகளால் பெரிதும் வெறுப்படைந்துள்ளனர்.   முதன் முறையாக மோடி மற்றும் பல்கலைக் கழக நிர்வாகிகள் வெறுப்பின் ஜுவாலையை உணர ஆரம்பித்துள்ளனர்.   விரைவில் அது அனைத்து தீமைகளையும் சுட்டெரிக்கும்”  எனத் தெரிவித்துள்ளார்.