kejri_1450593057

டெல்லி மக்களிடையே ஆம் ஆத்மி கட்சி அதன் செயல்பாட்டாலும், கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையாலும் அமோக செல்வாக்கு பெற்று, இந்திய நாட்டின் இரு மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ், பிஜேபியை வீழ்த்தி, டெல்லியில் ஆட்சி அமைத்தது. ஓராண்டு நிறைவுற்ற நிலையில், நிறைவேற்றியுள்ள மக்கள் நல திட்டங்களை பார்க்கும் போது கெஜ்ரிவால் சிறப்பாக மக்கள் பணியாற்றியுள்ளதை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

மின்சாரக் கட்டணம் பாதியாகக் குறைப்பு, மின்கட்டண உயர்வு கிடையாது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசம், கல்விக்கு அதிக (2 மடங்கு) நிதி ஒதுக்கீடு, டெல்லி பள்ளிக் கல்வி திருத்த சட்டம்-2015 மூலம் தன்னிச்சையாக கட்டணங்களை பள்ளிகள் உயர்த்துவதை நிறுத்தியது, நர்சரி வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்கும்போது பெற்றோர்களிடம் அல்லது குழந்தைகளிடம் Interview நடத்தினால் 5 ஆண்டு சிறை தண்டனை என்ற சட்டத்தை அமுல்படுத்தியது, பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் பெறப்பட்ட தொகையைப்போல் 10 மடங்கு அபராதம் விதிப்பது என அமர்க்களமான பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருக்கிறார்.

அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 10,000 புதிய படுக்கைகள், அனைத்து வசதிகளுடன் “ஆம் ஆத்மி மொகல்லா கிளினிக்” மற்றும் முக்கிய 100 மையங்களில் “ஆம் ஆத்மி பாலி கிளினிக்” அமைத்தது, தனியார் மருத்துவமனைகள் தாறுமாறாக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்தது, “தூய்மை டெல்லி” திட்டத்தின்படி டெல்லி நகரை சுத்தமாக வைத்திருத்தல், 1000 ஏசி பேருந்துகள் உட்பட 10,000 புதிய – கூடுதலான பேருந்துகளை இயக்கியது, ஒரே டிக்கெட்டில் மெட்ரோ ரயில், பேருந்து, ஆட்டோவில் பயணம் செய்யும் திட்டத்தை அமலாக்கியது, குற்றங்களை தடுக்க பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV), wi-fi வசதி ஏற்படுத்தியது போன்றவை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி வாழ் மக்களிடையே நல்ல பெயரை பெற்றுத்தந்துள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டை நிலைநாட்ட ஒற்றை- இரட்டைப்படை எண் கார் பயன்பாட்டு திட்டத்தை சோதனையிட்டு வெற்றி பெற்றது அவரின் சமீபத்திய சாதனைகளில் ஒன்று. அதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளைப்போல் டெல்லியில் காற்றின் தரம் 2015ல் மோசமாக இல்லை என்று டெல்லி ‘மாசு கட்டுப்பாட்டுக் குழு’ நீதிமன்றத்தில் பாராட்டு கிடைத்துள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியுடன் பேசி, 45 நாட்களில் யமுனா நதியை சுத்தப்படுத்தி புதுப்பிக்க முடிவு எடுத்துள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள்.

சட்டமன்றத்தில் ஜனலோக்பால் சட்டத்தை நிறைவேற்றியபோது, அன்னா ஹசாரே சொன்ன திருத்தங்களையும் சேர்த்து அதை இறுதிப்படுத்தியது கெஜ்ரிவால் அரசு. அதன் மூலம் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் லஞ்சம்-ஊழல் கணிசமாக குறைத்துள்ளது. ‘மக்கள் பிரதிநிதிகள் காண்ட்ராக்டர்களிடம் லஞ்சம் பெறுவதை ஒழித்திட வேண்டும், ஊழலில் ஈடுபடுபவர்களை சும்மா விடமாட்டோம்’ என்று எம்.எல்.ஏ.க்களுக்கு அறுவுறுத்தியது மட்டுமின்றி, தனது அமைச்சரவையில் உணவு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவரை ஊழல் புகார் காரணமாக பதவி நீக்கம் செய்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டது, ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான அதிகாரிகளை உடனடி பதவி நீக்கம் செய்ததும் இப்போதைய காலத்தில் அவசியமான நடவடிக்கையாகும்.

அரசுத்துறைகளிலிருந்து அனைத்து சான்றிதழ்களையும் (திருமணப்பதிவு, வருமானம், சாதி, தேசியம், பிறப்பு, இறப்பு) பெறுவதற்கான கால அவகாசம் 60 நாட்களிலிருந்து 14 நாட்களாக குறைப்பு. அவற்றை இணையதளத்தில் பெறுவதற்கான திட்டம் அமல். ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுத்திட எல்லாக் கடைகளும் கணினி மயம், அனைத்து உயரதிகாரிகளும் ஒவ்வொரு நாளும் 12 மணி முதல் 1 மணி வரை பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறியும் திட்டம் அமலாக்கம்.

பொதுமக்களின் குறைபாடுகளை ஒரு வாரத்திலும், அவசரமான பிரச்னைகளில் 48 மணி நேரத்திலும் நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு. ரூ.247 கோடி மதிப்புள்ள 6 வழிப்பாலத்தை ரூ.142 கோடியில் மிகவும் தரமாகக் கட்டி முடித்து அரசுக்கு ரூ.105 கோடி நிதியை மிச்சப்படுத்தி, மிச்சமான நிதியில் இன்னொரு பாலத்தையும் கட்டி சாதனை என அரவிந்த் கெஜ்ரிவால் தனது செயல்பாட்டால் டெல்லியை மட்டுமல்லாது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மக்களின் நன்மதிப்பையும் பெற்று விளங்குகிறார்.

  •  ராமன் ( வாட்ஸ்அப் செய்தி)